Top posting users this month
No user |
விடுதலையாகிவிட்டார் இந்தியாவின் இரும்பு பெண்மணி
Page 1 of 1

ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து போராடி வரும் இரோம் ஷர்மிளாவை நேற்று நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்த 2000ம் ஆண்டு மணிப்பூரில் ஆயுதப்படை நடத்திய வன்முறையைக் கண்டித்து ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
எனினும் அவருக்கு கட்டாயமாக உணவு திணிக்கப்பட்டு வருகிறது. இவர் இந்தியாவின் இரும்பு பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார்.
உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை செய்து கொள்வதாகாது என்று கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும், அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். எனவே, பொலிசார் மீண்டும் புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.
தற்போது மணிப்பூர் மாநில மாவட்ட நீதிமன்றம் ஒன்று அவரை விடுதலை செய்துள்ளது.
தற்கொலை முயற்சிகளைக் குற்றமாகக் கருத முடியாது என்று சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
எனவே, இரோம் ஷர்மிளாவை இனியாவது முற்றிலுமாக விடுதலை செய்வார்கள் என்று அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum