Top posting users this month
No user |
தமிழ் இனி -2000
Page 1 of 1
தமிழ் இனி -2000
சிரியர் : பா.மதிவாணன்,
வெளியீடு: காலச்சுவடு அறக்கட்டளை
பகுதி: இலக்கியம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
காலச்சுவடு அறக்கட்டளை, 669, கே.பி.கே., சாலை, நாகர்கோவில்-629 001.
`காலச்சுவடு' அறக்கட்டளை `ஆறாம் திணை' இணைய இதழ், இலங்கையின் `சரி நிகர்' இதழ் ஆகியவை ஷ்ரீராம் டிரஸ்ட் ஆதரவுடன் `தமிழ் இனி...' என்றொரு மாநாட்டை, சென்னை எழும்பூரில் உள்ள அட்லாண்டிக் ஓட்டலில், கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு செப்டம்பரில் நடத்தியது. உலகெங்கிலும் இருந்து பல தமிழறிஞர்கள் வந்து பங்கேற்றனர். இம்மாநாட்டில் தமிழ் பற்றி, தமிழ் இலக்கியம் பற்றி, இவற்றின் எதிர்கால நிலை பற்றியும் ஆழ்ந்த அக்கறையுடன் அலசி ஆராய்ந்த கட்டுரைகள் பல வாசிக்கப்பட்டன. தமிழின் மேம்பாட்டுக்கான உலகப் பார்வை மிக்க அக்கட்டுரைகள் காற்றோடு போய் விடாமல், இத்தொகுப்பாக (ஒரு சில ஆண்டுகள் தாமதத்துடன்) தற்போது வெளிவந்துள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், வாழ்க்கை வரலாறு, தேசிய - திராவிட, மார்க்சிய, தலித் இலக்கியங்கள், பெண்ணியப் படைப்புகள் என பல்வேறு தலைப்புகளில், பிரபல எழுத்தாளர்கள் எழுதி வாசித்த கட்டுரைகள் இதுவரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் பற்றி இவ்வளவு சிறப்பான நூல் எதுவும் வந்ததில்லை எனலாம். மொத்தம் 1030 பக்கங்கள் இத்தொகுப்புடன் மாநாட்டில், சுஜாதா, சுந்தரராமசாமி, பிரபஞ்சன், அசோகமித்திரன், கா.சிவத்தம்பி போன்ற எழுத்தாளர்கள் பலர் பேசும் காட்சிகள் உள்ள 70 நிமிட `சிடி' ஒன்றும் இணைப்பாக அளிக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கியம் பயிலுவோருக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் மிக மிக உதவும் பொக்கிஷம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum