Top posting users this month
No user |
Similar topics
முதியோர் இல்லத்திற்கு காத்திருக்கும் முதியவர்: புறக்கணிப்பின் வலியால் கண்களில் வடியும் கண்ணீர்
Page 1 of 1

முதியோர் இல்லங்களை தேடி அலையும் முதியவர்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது.
மதுரை அரசு மருத்துவமனையில் முகத்தில் வெண்தாடியும், காவி வேஷ்டி, கருப்புச் சட்டை அணிந்திருந்த முதியவர் ஒருவர் ஒரு பெண் பொலிசிடம், அம்மா பசிக்குது... ஏதாவது கொடுங்களேன் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த பெண் பொலிஸ், ஒரு 10 ரூபாயை கொடுக்க தயக்கத்துடன் மீண்டும் பெண் பொலிசை அணுகி, இந்த காசு கூட வேணாம், என்னை ஏதாவதொரு முதியோர் இல்லத்தில சேர்த்து விட முடியுமா? என்று கூறுகிறார்.
விசாரணையில் அந்த முதியவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சமீபத்தில் வந்த புதிய வரவு எனத் தெரியவந்தது.
அந்த முதியவர் தனது சோகக்கதையை கூறியதாவது, என் பெயர் குருசாமி. விருதுநகர் மாவட்டம் நடையநேரிதான் சொந்த ஊர். எனக்கு ஒரு மகன், மகள். மகன் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் கூலி வேலை செய்கிறார்.
அவருக்கு 3 குழந்தைகள். மகள் அமராவதி கோவையில் இருக்கிறார். அவருக்கு 2 பெண் குழந்தைகள். மனைவி ராஜம்மாள் உடல்நலக்குறைவால் 20 வருடங்கள் முன்பு இறந்து விட்டார்.
அதன்பிறகு கவனிக்க ஆள் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்.
காமராஜர் ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிகுளம் அணையில் ரூ.2 ஊதியத்திற்கு வேலை பார்த்தேன். எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைகளை வளர்த்தேன், ஆனாலும் அவர்கள் என்னை மறந்து விட்டனர்.
மனைவி இறந்த பிறகு, கட்டிட வேலைக்கு சென்று சம்பாதித்தேன். ஆனால் இன்று என்னால் உழைக்க முடியாது. வீட்டை விட்டு விரட்டப்பட்ட நான், ஊர் ஊராகச் சுற்றினேன்.
திருப்பரங்குன்றம் கோயிலில் ரோட்டோரம் கிடந்து 2 ஆண்டுகளைக் கழித்து விட்டேன். கடைசி காலத்தில் மகனிடம் தஞ்சமடையலாம் என்று சமீபத்தில் மகன் வீட்டுக்கு சென்றேன்.
நானும் குழந்தைகளும் இருக்கிறோம். எங்களுக்கே போதுமான இடவசதி இல்லை, நீ எங்கு இருப்பாய்? எனக்கூறி மகன் விரட்டி விட்டான்.
சரி அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைத்து நானும் திரும்பி விட்டேன். உடல்நலம் பாதித்தது. அரசு மருத்துவமனை பகுதிக்கு வந்தால், மருத்துவ வசதியுடன், வயிற்றுப்பசிக்கும் ஏதாவது பிச்சை கிடைக்கலாம் என்ற எண்ணத்தில்தான் இங்கே வந்தேன்.
இங்கேயும் என்னைப் போல் பலர் முதுமையோடு நோயிலும், பசியிலும் தவித்து வருகிறார்கள். எனக்கு நிற்கக்கூட முடியவில்லை.
ஆனாலும் யாராவதொரு வேலை கொடுத்தால் செய்யத் தயராக இருக்கிறேன். உழைத்து சாப்பிடுவது தான் சுகமானது. பிச்சை அவமானமாக இருக்கிறது.
வேலை தராவிட்டாலும், ஏதாவதொரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விட்டால், வேளாவேளைக்கு பசியைப் போக்கிக் கொண்டு, முடிந்தவரை ஏதாவதொரு வேலை பார்த்தபடி என் மீதிப்பொழுதைக் கழித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
கனமாக பேசி முடித்தவரின் கண்களில் இருந்து புறக்கணிப்பின் வலியுடன் கூடிய கண்ணீர் வழிகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதியின் சொல்லை நம்பி தனது பிள்ளையின் வருகைக்காக கண்ணீர் சிந்தியபடி காத்திருக்கும் ஒரு தாய்
» திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று சந்தித்த விஜயகாந்த்: அரசியல் உலகில் பரபரப்பு
» கிளிநொச்சி முரசுமோட்டையில் விபத்து! முதியவர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum