Top posting users this month
No user |
தீ பிடித்துவிட்டதா? கைப்பேசி மூலம் தீயை அணைக்கும் கருவியை கண்டுபிடித்து மாணவன் சாதனை
Page 1 of 1

தேனி மாவட்டத்தில் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் கைப்பேசி மூலம் தீயை அணைக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளான்.
தொழிற்சாலை, பேக்டரி என்று ஆட்கள் உள்ள இடத்தில் தீ விபத்து நடந்தால் அதனை உடனடியாக அணைத்து விடலாம்.
சிலிண்டர் சேமிப்பு கிடங்கு, பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை, வேதிப்பொருட்கள் கிடங்கு போன்ற இடங்களில் தீ விபத்து நடந்தால் இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதுடன் உயிரிழப்பு மற்றும் சேதமும் அதிகமாக இருக்கும்.
இதனை தடுக்க தீ விபத்து நடந்த இடத்தில் கைப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கும் முறை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேலும் ஒருபடி கூடுதலாக கைப்பேசி மூலம் தகவல் தெரிவிப்பதுடன் விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தானாக தண்ணீர் தெளித்து தீயை அணைக்கும் கருவியினை தேனி மாவட்டம், கூடலூர் என்.எஸ்.கே.பி. பள்ளியை சேர்ந்த 9–ம் வகுப்பு மாணவர் ஜெகதீஸ் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து மாணவன் ஜெகதீஸ் கூறியதாவது, எனது தந்தை பரமன் விவசாய வேலை பார்த்து வருகிறார். சிறுவயதில் இருந்தே ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. அதன்படி தீ விபத்தை தடுப்பதற்கான சாதனம் கண்டுபிடிக்க முயற்சி செய்தேன்.
தீ விபத்து என்பது எந்த இடத்திலும் எதிர்பாராமல் ஏற்படும்போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.
அதிலும் இரவு நேரங்களில் ஆளில்லாத சமயம் தீ விபத்து நடந்தால் அந்த தீ பல இடங்களுக்கு பரவி பெரும் சேதத்தை விளைவித்து விடுகிறது. இதனை தடுக்க தீயை அணைக்கும் கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தேன்.
டி.வி.டி சென்சார்கள், எச்சரிக்கை விடுக்கும் ஒலிப்பான், பேன், அபாய விளக்குகள் போன்ற சாதனங்களை பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு இடத்தில் தீ விபத்து நடந்தவுடன் மொபைல் போன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
அவர்கள் வருவதற்குள் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் டியூப் மூலம் தண்ணீரை தானாக தெளிக்கும். இதனால் சேதம் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எனது சாதனையை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு செய்துகாட்டியுள்ளேன். வீடுகளுக்கு இந்த சாதனத்தை பொருத்தவேண்டுமெனில் ரூ.2 ஆயிரம் வரை செலவாகும்.
தொழிற்சாலைகளுக்கு பொருத்த ரூ.5 ஆயிரம் வரை செலவாகும். எனது அடுத்த முயற்சியாக விவசாய நிலங்களில் மின்சாரம், சோலார் இன்றி தண்ணீர் இரைக்கும் எந்திரம் கண்டுபிடிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
முகப்பு Print Send Feedback

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum