Top posting users this month
No user |
முஸ்லிம் தலைமைகளுக்கும், அமைச்சர்களுக்கும் அன்பான வேண்டுகோள்!
Page 1 of 1

தற்பொழுது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய மூல காரணியான தமிழ் மக்களின் வாக்கு வங்கியின் பலன் சகோதர இனமான முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு அமைச்சு பதவிகளை அள்ளி கொடுக்கின்றது என்பது சகலருக்கும் தெரியும்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிகவும் நியாயமான கோரிக்கையான கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தில் தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து அந்த சபையின் ஆட்சியை நடாத்தக்கூடிய சூழ்நிலையில் முதலமைச்சர் பதவிக்காக முஸ்லிம் தலைமைகள் போராடுவது புதுமையானவும் புதிராகவும் இருக்கின்றது.
காரணம் வடக்கு, கிழக்கு மேற்கு மலையகம் என்று தமிழ் மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை சிதராமல் அளித்த காரணத்தினாலேயே இன்று புதிய ஜனாதிபதியுடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர் இதில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அமைச்சுக்களை நாம் சற்று ஆராய்ந்துப் பார்த்தால் தமிழ் அமைச்சர்களாக பதவியேற்றவர்களில் அனேகமானவர்களில் திகாம்பரத்திற்கு அமைச்சரவை அந்தஸ்த்து இருக்கின்றபோதிலும் அவரின் சேவைகள் மலையக தோட்ட துறைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆகவே முழு நாட்டிற்கும் உரிய அமைச்சராக இருக்கின்றபோதிலும் செயற்பாடுகள் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் க.வேலாயுதத்தின் செயற்பாடுகளும் வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கே உரித்தானதாக இருக்கப்போகின்றது.
வே.இராதாகிருஸ்ணனின் கல்வி அமைச்சர் மாத்திரமே முழு இலங்கைக்கும் உட்பட்டதாக கருதலாம் ஆனால் அதன் செயற்பாடுகளின் பின்பே நாம் உண்மையான நிலையை உணரக்கூடியதாக இருக்கும் இதேபோல் சுவாமிநாதன் நிலையும் சற்று மாறுபட்ட அமைச்சாக இருக்கின்றது.அதேவேளை திருமதி மகேஸ்வரனின் அமைச்சு இருக்கின்ற போதும் அதன் நடவடிக்கைகளை பொருத்திருந்து பார்க்கும் நிலையே உள்ளது.
முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக நாம் இங்கு கருத்து கூறுவதாக எண்ணக்கூடாது. ஆனால் கடந்த அரசியலிலும் சரி நடப்பு அரசியலிலும் சரி பல்வேறு அமைச்சசுக்களை ஏற்று சேவையாற்றிய முஸ்லிம் அமைச்சர்கள் தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் நடவடிக்கை எடுத்து முடித்து தமிழ் மக்களை மகிழ்வித்ததாக எந்த சம்பவத்தையும் நாம் காணவில்லை.
இந்நிலையில் விட்டுகொடுப்பு என்பது ஒரு சாராருக்கு மாத்திரம் வரையருக்கப்பட்டதில்லை பங்கு கேட்கும் அல்லது பங்காளியாகவிரும்பும் இருசாராருக்குமே உரித்தாகும்.
தற்போதைய புதிய முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கு – கிழக்கு, மேற்கு மற்றும் மலையக மக்களுக்கும் தங்களின் கடமைகளை, சேவைகளை, உதவிகளை செய்ய வேண்டிய கட்டாய கடப்பாடுகள் உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
அமைச்சர் அந்தஸ்த்துள்ள அத்தனை முஸ்லிம் அமைச்சர்களும் தாங்கள் இந்த பதவிக்கு வர பிரதானமாக தமிழ் மக்களின் பங்களிப்பும் உள்ளது என்பதை மனதில் வைத்து முழு நாட்டிலும் வாழ்கின்ற தமிழ் மக்களின் குறைகளை இனியாவது போக்க ஆர்வம் காட்டவேண்டும்.
அமைச்சர் ஹக்கீம் நியமனம் பெற்றுள்ள நகர அபிவிருத்தி அமைச்சின் மூலம் மலையக பகுதிகளுக்கும் மாபெரும் சேவையை செய்யமுடியும் மலையக நகர அபிவிருத்தியில் தமிழ் மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்றபடி அவரின் முஸ்லிம் அமைச்சர் என்றக் காரணத்தால் முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் முதலிடம் கொடுக்கும் முயற்சிகளை கைவிட்டு விகிதாசார அடிப்படையில் அமைக்கப்படும் கட்டிடங்கள் கடைகள் மற்றும் நில பகிர்ந்தளிப்பு நடைபெற்றாகவேண்டும் அதே போல் ஏனைய முழு நாட்டிற்கும் அவரின் சேவை சகலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
அதேபோல் ஏனைய அமைச்சர்களும் செயல்படவேண்டும் குறிப்பாக இ.தொ.கா மூலம் அரசியலுக்கு வந்த பைசர் முஸ்தப்பா அவர்கள் இன்று விமானத்துறை இராஜாங்க அமைச்சராக இருக்கின்றார்.
அவரை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு மலையக தோட்ட தொழிலாளர்களுக்கும் உண்டு என்பதை நினைத்து அவர் அந்த அமைச்சில் ஏற்படுகின்ற தகுதிகேற்ற வேலை வாய்ப்புக்களை தமிழருக்கும் வழங்க வேண்டும் “இதேபோல் வர்த்தகம் சாலை அபிவிருத்தி என்று முஸ்லிம் அமைச்சர்களுக்கு இந்த முழு நாட்டிலும் சேவையாற்றும் வகையிலேயே அமைச்சர்கள் வழங்கப்பட்டுள்ளது இது தமிழ் அமைச்சர்களுக்கு கிடைக்காத விடயமாகும்.
இன்றைய அரசில் கூட தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றிருக்கும் அரசு தமிழ் அமைச்சர்களுக்கு அரசு இந்த சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்பதை நமது தலைமைகளும் மக்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
எனினும் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி எவ்வாறு தமிழ் மக்களின் மனங்களை கவரும் செயற்பாட்டில் இருப்பார்கள் என்பதை நாம் மிகவும் அவதானமாக அவதானித்துக் கொண்டே இருப்போம்.
கடந்த அரசின் அமைச்சர் அறுமுகம் தொன்டமான் கூட அவருக்கு மிக நெருங்கிய செயலாளராக முஸ்லிம் ஒருவரை நியமித்து இருந்ததை ஞாபகப்படுத்துகின்றோம். அதேபோல் தற்பொழுது புதிய அமைச்சு பதவிகளில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தமிழ் மக்களில் தகுதி படைத்தவர்களை அவர்களின் அமைச்சுக்குள் உள்வாங்கி அவர்களிடம் பாகுபாடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் எமது வேண்டுகோள் ஆகும்.
இந்த சூழ்நிலையில் வடக்கு – கிழக்கு இந்த இரண்டு மாகாணத்திலும் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளில் விரிசல் நிலை ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இரு சாராருக்கும் இருக்கின்றபோதிலும் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் தலைமைகள் முதலமைச்சர் பதவிக்காக பிரிவினையை ஏற்படுத்த முயலக்கூடாது மத்தியில் உங்களின் அமைச்சு பதவிகளில் தமிழ் மக்கள் போட்டி போடவிடவில்லை உங்களுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்துள்ளது அதற்கு நன்றிக்கடனாக நீங்கள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்க உதவ வேண்டும்.
அது உங்கள் நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டும் என்பது ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் இது முழு உலகில் வாழும் தமிழ் நெஞ்சங்களின் கோரிக்கையாகும் கிழக்கு மாகாணத்தில் முதல் அமைச்சர் பதவியை த.தே.கூட்டமைப்பு பெறுவதால் உங்கள் சேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை மாறாக அப்பகுதி முதலமைச்சர் உங்களுக்கு அதிக உதவிகளையே செய்ய முன்வருவார் என்பதே யதார்த்தம் காரணம் நீங்கள் முழு நாட்டிற்கும் அமைச்சர்கள். அவர்களோ மாகாணத்திற்கு மாத்திரம்.அதையும் நீங்கள் கோருவது விந்தையாகும்.
நீங்கள் முழு கேக்கையும் தனியாக உண்டு அனுபவிக்க எண்ணாதீர்கள் பகிர்ந்து உண்ணுங்கள். ஒற்றுமையை பாதுகாக்க கிடைக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எம்மோடு கைக்கோர்த்துக் கொள்ளுங்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum