Top posting users this month
No user |
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு முன் உரிமை அளிக்க வேண்டும்: ஹெல உறுமய
Page 1 of 1

நாட்டில் இதுவரை கடந்த அரசின் ஊழல் மோசடி தொடர்பாக 30 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
எவராலும் இந்த மோசடி சம்பந்தமான விசாரனைகளை தடுத்து நிறுத்த முடியாது.
த.தே.கூ தனது நிலைப்பாட்டில் மிக தெளிவாக உள்ளது அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் தெளிவாக உள்ளார்கள் இவ்வாறு ஹெல உறுமய தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பாராளுமன்ற முதல் அமர்வில் பேசிய தேரர் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தி என் போர்வையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் அதுவரை 30ஆயிரம் முறைப்பாடுகள் குவிந்துள்ளதெனவும் இவைகள் அணைத்தும் முறையாக விசாரணை செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமரோ அவரின் அமைச்சரவையோ அதை தடுத்து நிறுத்த முடியாது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் நீதியாக நடைபெறவில்லை, மாறாக அணைத்து அரச வளங்களும், உத்தியோகஸ்தர்களும், அரச ஊடகங்களும் இணைத்துக் கொண்டே தேர்தல் பிரசாங்களை மேற்கொண்டது.
யுத்தம் தொடர்பாக அதிகமாக பேசப்படுகின்றது.யுத்த வெற்றி தனிப்பட்ட நபரின் மூலம் பெற்ற வெற்றி இல்லை இந்த வெற்றி பலரின் கூட்டு முயற்சியால் பெறப்பட்டது.
சரத்பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டார் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது.இது சரியா என இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும் அவர் இழந்த அணைத்தும் மீண்டும் அவருக்கு கிடைக்கவேண்டும்.
த.தே.கூ உடன்படிக்கை சம்பந்தமாக பேசப்பட்டது த.தே.கூ ஜனநாயகத்திற்கு திரும்பியுள்ள ஒரு அமைப்பாகும். அவர்களை மக்களின் ஆதவை பெற்று பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர் அவர்கள் மிக தெளிவாக உள்ளனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் மிக தெளிவாக அவர்களின் நிலைப்பாட்டில் உள்ளனர். ஆகவே இங்கு ரகசிய ஒப்பந்தம் ஏதும் கிடையாது. தமிழர் தேசிய கூட்டமைப்பு இன்று பொது இடத்திற்கு வந்துள்ளது.
ஆகவே வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து நாம் கவனம் எடுக்க வேண்டியுள்ளவர்களாக இருக்கின்றோம் வடக்கு பிரச்சினைகளுக்கு முன் உரிமை கொடுக்க வேண்டியது நமது கடமையாகும் இவ்வாறு பாராளுமன்றில் தேரர் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum