Top posting users this month
No user |
Similar topics
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்
Page 1 of 1

வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளாக உள்ள பல்கலைக்கழக பட்டதாரிகள் தமது அரசாங்க நியமனத்தை வலியுறுத்தி இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிணையும் மேற்கொண்டிருக்கின்றனர்.
இன்றைய தினம் காலை 10மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்த து. இதில் வடமாகாணத்திலுள்ள தமிழ்பேசும் பட்டதாரிகள் கலந்து கொண்டதுட ன், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கான குழு ஒன்றி்ணையும் இன்றைய தினம் நியமித்துள்ளனர்.
மேலும் போராட்டத்தின் நிறைவில் ஜனாதிபதிக்கும், பிரதமர் மற்றும் வடமாகாண முதலமைச்சர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் மகஜர்களும் கையளிக்கப்பட்டன. கையளிக்கப்பட்ட குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் நாட்டில் ஏற்பட்டுள்ள உயிரூட்டமான மாற்றங்களை வரவேற்கின்றோம்.
இம் மாற்றங்கள் நாட்டில் அனைத்து துறைரீதியாகவும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் எவ்விதச் சந்தேகங்களுமில்லை. இதனடிப்படையில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்து வருகின்ற புதிய தேசிய அரசாங்கத்திற்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.
இந்நிலைமையில் தங்களிடம் கோருவது யாதெனில், பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய பட்டதாரிகளாகிய நாம் 2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை எந்தவொரு வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான நிலைமைகளிலேயே இருந்து வருகின்றோம். சரியான வினைத்திறனான தகைமைகளைக் கொண்டிருந்தும் எந்தவொரு வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களுக்கு அரசியல் தலையீடுகளினால் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.
கடந்த காலங்களில் சில அரசியல் தலைவர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் தகுதியற்றவர்கள் வேலைவாய்ப்புக்களில் உள்ளீர்க்கப்பட்டு உள்ளார்கள். வேலை வாய்ப்புகளுக்கு உள்ளீர்ப்பதற்குரிய சட்டரீதியான நடைமுறைகள் நாட்டில் இருந்தபோதிலும் கடந்த காலங்களில் வடமாகாணத்தில் இவை பின்பற்றப்படாமல் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது மிகவும் வேதனையளிக்கின்ற விடயமாகும். இது மட்டுமல்லாமல் தேர்தல் காலங்களில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி பலதடவைகள் அலைக்கழிக்கப்பட்டு பலரும் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை மாற்றத்துடன் எமக்கான சகல வாய்ப்புக்களும் திறந்திருப்பதற்கான சூழ்நிலைகள் தோன்றியிருப்பதால் புதிய அரசின் கௌரவ பிரதம மந்திரியவர்கள், புதிய பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக உறுதியளித்துள்ள சூழ்நிலையில், வடமாகாணத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பட்டம் பெற்று வெளியேறிய 05 அணிகளைச் சேர்ந்த பல பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்கான ஒரு கோரிக்கையாக இம் மகஜரை தங்கள் மேலான கவனத்துக்குச் சமர்ப்பிக்க விரும்புகின்றோம்.
புதிய அரசின் நல்லாட்சிக்கான பிரகடனத்தின்படி புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்போது வடமாகாணத்தைச் சேர்ந்த நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் பல சிரமங்களைத் தாண்டி கல்வியினைக் கற்று தற்போதும் வேலைகள் எதுவுமின்றியுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளையும் இணைத்து புதிய அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புக்களை பாகுபாடின்றி வழங்கும் வண்ணம் கேட்டுக்கொள்வதுடன் எமது இக்கோரிக்கையை கனிவுடன் சாதகமான முறையில் பரிசீலிப்பதுடன் கூடிய விரைவில் இதற்கான சாதகமான பதிலை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நாளைமுதல் உண்ணாவிரத போராட்டம்
» ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்
» தீர்வு இல்லையேல் உண்ணாவிரதம்: அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆக்ரோஷம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum