Top posting users this month
No user |
ஆனைக்கோட்டை இராணுவ முகாம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1

பொது மக்களின் காணிகளில் உள்ள முகாம்களை அகற்றி காணி உரிமையாளரிடம் காணிகளை ஒப்படைக்குமாறு கோரி போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
ஆனைக்கோட்டை கூழாவயடியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் இந்த போராட்டம் நடைபெற்றது.
தனியாரின் காணியில் 11வது சிங்க ரெஜிமன்ட் படை முகாம் அமைந்துள்ளது.
இந்த காணிகளை இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 7ம் திகதி (ஜனாதிபதி தேர்தலுக்கு முன்) சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் கடிதம் அனுப்பப்பட்டு இன்று காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த காணி சுவீகரிப்பை நிறுத்தும்படி புதிய ஜனாதிபதி கட்டளையிட்டதால் இது இடைநிறுத்தப்பட்டது.
நிரந்தரமாக உரிமையாளர்களிடம் காணி வழங்கப்பட வேண்டும் என்று கோரியே இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய முன்னணி மற்றும் த.தே.கூ மாகாணசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ்.ஆனைக்கோட்டை - கூழாவடி பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 5 வீடுகள் மற்றும் காணிகளை ஸ்ரீ லங்கா படையினரின் சிங்க றெஜிமன்ட் பி பிரிவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பகுதியில் 5குடும்பங்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் காணிகளை படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டு படையினரின் தேவைகளுக்காக இன்றைய தினம் கையளிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த கையளிப்பு விடயம், உடனடியாக நிறுத்தப்பட்டதாக ஜனாதிபதி பணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் மாலை காணி உரிமையாளர்களை படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து அச்சுறுத்தியதாகவும், குறித்த காணிகள் சுவீகரிக்கப்பட்டமை தமக்கு தெரியாமல் நடைபெற்றது எனவும் குற்றஞ்சாட்டிய மக்கள், காணி கையளிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டாலும் காணிகள் காணி உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக கூறினர்.
இந்நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து, காலை 9 மணி தொடக்கம் 9.30மணிவரையில் முன்னதாகவே திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தனர்.
இதேவேளை புதிய ஜனாதிபதி வருகையின் பின்னர் சிறிது காலம் ஒளிந்திருந்த புலனாய்வாளர்கள் இன்றைய தினம் மீண்டும் வெளியில் வந்து வழக்கமாக மக்களை படம் பிடித்து அச்சுறுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum