Top posting users this month
No user |
Similar topics
இளவாலை, வாதமடக்கி கிராம சிறுவர்களுக்கு நாம் நண்பர்கள் அமைப்பினர் உதவி
Page 1 of 1

பொங்கல் தினத்தை முன்னிட்டு மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்து வரும் இளவாலை வாதமடக்கி கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நாம் நண்பர் அமைப்பின் செயலாளரும், இளையோர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.உசாந்தன் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.
முன்னதாக வாதமடக்கி வைரவர் ஆலய முன்றலில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களால் பொங்கல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கிராமச்சிறுவர்களுக்கு ஆலய முன்றலில் “நாம் நண்பர்கள் அமைப்பினரால் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்து தெரிவிக்கையில், இன்றைய இளைஞர்களில் ஒரு சிலர் தம் வாழ்க்கை பாதையை மாற்றி சமூக ஒழுக்க விதிமுறைகளை மீறி சமூக விரோத செயற்பாடுகளுக்கு துணை போகின்ற நிலையில் நாம் நண்பர்கள் அமைப்பினர் அவ்வாறு அல்லாமல் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருவது போற்றத்தக்கது.
இவ்வாறான அமைப்புக்களினூடாக இளைய சமூகம் நேரான உயரிய சிந்தனையோடு கட்டி எழுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது இனம், மொழி சார்ந்த கலாச்சாரக் கட்டமைப்புகள் மீறப்படாத வகையில் சிறப்பான வாழ்வை கட்டி எழுப்ப இன்றைய இளைய சமுதாயம் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு.முரளீதரன், இளவாலை கிராம அலுவலர் பிறேமினி, நாம் நண்பர் அமைப்பின் பிரதிநிதிகள், சமூக சேவை உத்தியோகத்தர் சிவா ,பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
» கார்த்தியின் நண்பர்கள்
» வித்தியா படுகொலை குறித்து கொழும்பில் பெண்கள் அமைப்பினர் ஊடகவியலாளர் மாநாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum