Top posting users this month
No user |
Similar topics
கற்கண்டுக் கதை கேளு!
Page 1 of 1
கற்கண்டுக் கதை கேளு!
கற்கண்டுக் கதை கேளு!
விலைரூ.120
ஆசிரியர் : மதிஒளி
வெளியீடு: உத்திராடம் புக்ஸ்
பகுதி: கதைகள்
ISBN எண்: –
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
குழந்தை இலக்கியம் வகையை சார்ந்தது இந்த நூல். குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது.
பொம்மைகளும், கதைகளுமே குழந்தைகளின் அற்புத உலகம். இந்த புத்தகத்தில் உள்ள கதைகளை, நம் பிள்ளைகளை படிக்க சொல்லியோ, நாம் படித்தோ சொல்லலாம். அவர்கள், இந்த கதைகளை விரும்பி ரசிப்பர் என்பதில் ஐயமில்லை.
நாம் பெரும்பாலும் கேட்ட கதைகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னிய நாட்டு மொழிகளில் இருந்து, ஆறு கதைகளை தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்துள்ளார். மற்ற கதைகளிலும், ஆசிரியர் தன் திறனை, அழகாக வெளிப்படுத்தியுள்ளார். நேரடி அறிவுரையாக இல்லாமல், கதையாக விவரித்து, இறுதியில் கருத்து சொல்வது நல்ல வழிமுறை. மொத்தம், 11 கதைகள் இடம்பெற்றுள்ளன. கடைசி பக்கங்களில், குழந்தைகளுக்கான, ‘வண்ணம் தீட்டி மகிழலாம், வரைந்து பழகலாம்’ என்ற தலைப்பில், ஏழு பக்கங்களுக்கு படங்கள் இடம் பெற்றுள்ளன.
ஓவியர் பத்மவாசனின் கோட்டோவியங்கள், கதைகளுக்கு துணை நிற்கின்றன. உயர்ரக தாளில், தரமான கட்டமைப்பில் புத்தகம் வெளிவந்துள்ளது. குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்த, இந்த புத்தகத்தை பரிசளியுங்களேன்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum