Top posting users this month
No user |
நள்ளிரவில் மண்ணில் புதைய தொடங்கிய கட்டிடம்: அலறியடித்து ஓடிய மக்கள்
Page 1 of 1

சென்னை ஷெனாய் நகரில் நள்ளிரவில் கட்டிடம் ஒன்று பூமிக்கு அடியில் 2 அடி இறங்கியதால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.
சென்னையில், திருமங்கலம் ஷெனாய் நகர் இடையே 5 கி.மீ. தூரம் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் முடிவடைந்ததுள்ளன.
இந்த வழித்தடத்தில் தற்போது தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில் ஷெனாய்நகர் புல்லா அவென்யூ சாலையும், 8 வது குறுக்கு தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள இரண்டடுக்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென சுமார் 2 அடி அளவுக்கு பூமியில் புதைந்தது.
இதையடுத்து மாடியில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.
அருகில் வீடுகளில் வசிப்பவர்களும் பூகம்பம் வந்துவிட்டதாக நினைத்து வெளியே ஓடியுள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்த மெட்ரோ ரயில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டதுடன் கட்டிட சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து அந்த தெருவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரான கூறுகையில், இந்த வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
நான் வெளியூர் சென்றுவிட்டு, இரவு சுமார் 11.30 மணி அளவில் வீட்டுக்குள் நுழையும்போது பயங்கர சத்தம் கேட்டது. பிறகுதான் கட்டிடம் பூமிக்குள் இறங்கியது தெரிந்தது என்று தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் மண்ணுக்குள் புதைந்தது பற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்றும் மெட்ரோ ரயில் பணியால், அந்த கட்டிடம் சேதமடைந்திருந்தால் உரிய இழப்பீடு வழங்குவோம் அல்லது கட்டிடத்தை சரிசெய்து கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum