Top posting users this month
No user |
குறுந்தொகை மூலமும் விளக்கமும்
Page 1 of 1
குறுந்தொகை மூலமும் விளக்கமும்
விலைரூ.150
ஆசிரியர் : சக்திதாசன் சுப்ரமணியன்
வெளியீடு: முல்லைப் பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
முல்லைப் பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40. (பக்கம்: 296.)
சங்கத் தமிழ் இலக்கியங்களை எட்டுத் தொகையுள் ஒன்று குறுந்தொகை என்னும் தேனினும் இனிய செந்தமிழ்ப் பனுவல். நானூறு பாடல்களும் தெவிட்டாத இன்பத்தை அள்ளிச் சொரிவன. பல திருமண மேடைகளில் பற்பலரால் மேற்கோளிட்டுப் பெருமை செய்யப் பெறும் "செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்பது இந்நூல் பாடல் வரியாகும்.
கடவுள் வாழ்த்தான, பெருந்தேவனார் பாடிய "தாமரை புரையும் காமர் சேவடி' என்று தொடங்கும் பாட்டும், கூடலூர் கிழார் பாடிய முளிர் தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்' எனத் தொடங்கும் புதுக்குடித்தன மணமக்களின் அன்பு பற்றிய பலவும் இந்நூலில் உள்ளனவே.
குறுந்தொகைப் பாடல்கள் எவ்வளவு சிறப்புடையனவோ அவ்வளவு சிறப்பு மிக்க விளக்கவுரையை எழுதியிருப்பவர், திரு.வி.க.,வின் மாணவர் சக்திதாசன் சுப்ரமணியன் ஆவார். இதுவிளக்கவுரையாக அமையாது சுவைசொட்டும் உரையாடல் வடிவத்தில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. திரு.வி.க., உடைநடையே வினாவும் விடையுமாகப் படிப்பவர் மனத்தை ஈர்ப்பதாகும். அதேபோல் சக்தி சுப்ரமணியனும் வினா - விடைக் காட்சிகளாக விரியுமாறு அழகுற எழுதியுள்ளார்.
""என்னடி செய்வேன் நான்?''
""ஏன்?''
""அவர் போய் விட்டாரே''
""போனால் என்ன?''
""வரைந்து கொள்ளவில்லையே''
""வரைவார்''
""எப்போ? அதான் போய்விட்டாரே''
இப்படித் தொடர்ந்து செல்லுகிறது ஒரு பாடல் விளக்கம். இப்படித்தான் அனைத்துப் பாடல்களுக்கும் மலைத்தேன், கொம்புத் தேன், குடிக்க மனம் மறுக்குமா? அப்படித்தான் இந்நூல் படிக்க எவருக்குத்தான் பிடிக்காது? சுவையுங்கள்!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum