Top posting users this month
No user |
அழிக்கப்படவிருந்த ஆவணங்களை கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்த ஜே.வி.பி!
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ஸ, ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரது மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன வகித்த புத்தசாசன உள்ளிட்ட அமைச்சுக்களின் தகவல்கள் அடங்கிய கோப்புகள் அழிக்கப்படவிருந்தன.
இது குறித்து கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து ஜே.வி.பியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி, அந்த ஆவண கோப்புகளை கைப்பற்றி அவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
அமைச்சுக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த வேலை வாய்ப்பு விண்ணப்ப பத்திரங்கள், நியமனக் கடிதங்கள், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான திட்டங்கள், மக நெகும மற்றும் திவி நெகும திட்டங்கள் பற்றி பல ஆவண கோப்புகள் அழிக்கப்படவிருந்தன.
மேற்படி அமைச்சுக்களில் அமைச்சர்களை பிரபலபடுத்துவதற்காக அச்சிடப்பட்ட புத்தகங்களும் இருந்துள்ளன.
இவ்வாறு அழிப்பதற்கு தயாராக வைக்கப்பட்டுள்ள பல ஆவணங்கள் பற்றிய தகவல்களை வழங்க அரச நிறுவனங்களின் ஊழியர்கள் அதிக அக்கறை காட்டி வருவதாக சுனில் அந்துன்நெத்தி கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum