Top posting users this month
No user |
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல புலம்பெயர் அமைப்புக்கள் உதவிகள் புரிகின்றன: கலையரசன்
Page 1 of 1

யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் வடகிழக்கு மக்கள் குறிப்பாக அம்பாறை மக்கள் சொல்லொன்ன துன்பதுயரங்களை அனுபவித்து வந்தார்கள், அவர்களின் துயரங்களில் இன்று புலம்பெயர் அமைப்புக்கள் பல நேசக்கரம் நீட்டின,அவற்றில் எளுகை அமைப்பும் ஒன்றாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
நேற்று திருக்கோயில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட சாகாமம், கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம், சிறிவல்லிபுரம் (காஞ்சிரங்குடா) போன்ற பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு புலம்பெயர் அமைப்பான எளுமை அமைப்பின் மூலம் 192522 ரூபாவுக்கான 370 உலர் உணவுப்பொருட்களும், சிறிவல்லிபுரம் மக்களுக்கு 105 பேருக்கு உடைகளையும் வழங்கியமையானது மிகவும் போற்றுதற்குரிய விடயமாகும்.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், திருக்கோயில் பிரதேசசபை தவிசாளர், மற்றும் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர், கிராமத்துப்பெரியார்கள், கிராமமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு பொதிகளை வழங்கி வைத்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்.
எமது மக்களின் துயர்துடைக்க புலம்பெயர் தேசத்தில் இருந்து பல அமைப்புக்கள் முன்வந்து உண்மையிலே மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் அடிப்படை வசதிகள் முதல் வாழ்வாதார உதவிகள் என பல்வேறு பட்ட கோணங்களில் உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள்.
அவர்களது அந்தப்பணியானது இந்த மாவட்டத்தினை பொறுத்தவரையில் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற செய்தியினையும் தெரியப்படுத்துவதோடு அவர்களுக்கு நன்றிகூறுவதற்கு நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கின்றோம்.
உண்மையிலே அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் பிரதேசசெயலகப்பிரிவிற்குட்பட்ட பல கிராமங்கள் இன்றும் மீள்குடியேற்றம் காணாத அடர்ந்த காட்டுப்பிரதேசமாகவே காட்சிதருகின்றது.
இவர்களுக்கான எந்த நிவாரணங்களையும் இந்தநாட்டு அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை. அதன் காரணமாகத்தான் அண்மையிலே நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றம் நடைபெறவேண்டும் என்பதற்கு இணங்க த.தே.கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு செவிசாய்த்து எமது மக்கள் அனைவரும் மகிந்த அரசுக்கு எதிராக வாக்களித்து இருந்தார்கள்.
இதனை தற்போது ஆட்சி பீடம் ஏறியிருக்கும் மைத்திரிபால சிறிசேன அரசானது கடந்த காலங்களில் முன்னைய அரசு விட்ட தவறுகளை தமிழ்மக்களை பொறுத்தவரையில் இனிமேலும் விடாமல் அவர்களுக்குரிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதனை நிருபிக்கவேண்டும்.
அத்தோடு அவர்கள் பிரதேசத்தில் வாழ்வாதாரத்திட்டங்களை ஏற்படுத்துவதோடு குளங்களை புனரமைத்து விவசாய நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum