Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


100 நாள் திட்டத்தின் நகர்வினை பொறுத்தே அமைச்சு பதவிகளை பெறுவது தொடர்பில் ஆராயப்படும்: துரைராஜசிங்கம் கி.மா.உ

Go down

100 நாள் திட்டத்தின் நகர்வினை பொறுத்தே அமைச்சு பதவிகளை பெறுவது தொடர்பில் ஆராயப்படும்: துரைராஜசிங்கம் கி.மா.உ Empty 100 நாள் திட்டத்தின் நகர்வினை பொறுத்தே அமைச்சு பதவிகளை பெறுவது தொடர்பில் ஆராயப்படும்: துரைராஜசிங்கம் கி.மா.உ

Post by oviya Tue Jan 13, 2015 1:14 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கை அடிப்படையில் இருப்பவர்கள் என்பதனால் உடனடியாக இந்த அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.
ஜனாதிபதியின் 100 நாள் திட்டம் தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் எவ்வாறு வழங்குகின்றது என்பதன் அடிப்படையில் தான் அமைச்சுகளை நாங்கள் இதனை ஏற்பதா இல்லையா என்பது பற்றி நாம் சிந்திப்போம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திபாலவின் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த 08ம் திகதி தேர்தலுக்குப் பின்னர் 09ம் திகதி நல்லதொரு விடிவின் பின்னர்தான் எமது மக்கள் உற்சாகமாக இருக்கின்றீர்கள். இதற்கு முன்னர் நாம் கூட்டங்கள் வைப்பதாக இருந்தால் நாங்கள் மல்லுக்கட்டி கூட்டங்கள் வைக்க வேண்டும். இப்பொழுது மக்களே கூட்டத்தினை ஒழுங்கு செய்து எம்மை அழைத்து பங்குகொள்ளச் செய்கின்றீர்கள் என்றால் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதனை மக்கள் சக்திதான் மாற்றியிருக்கின்றது.

உண்மையில் இந்தத் தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மஹிந்த அவர்கள் கூறியிருக்கின்றார் நான் வெற்றியடைந்திருக்கின்றேன். சிங்கள மக்கள் எனக்கு வாக்களித்திருக்கின்றார்கள் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை அதனால் தான் நான் தோற்றுப்போனேன் என்று தெரிவித்திருக்கின்றார். இது தற்போதையை ஜனாதிபதி மைத்திரிபால அவர்களுக்கு மஹிந்த அவர்கள் வழங்குகின்ற செய்தி. தமிழர்களின் வாக்கினாலேதான் இன்று அரசியல் மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது என்ற விடயத்தினை மஹிந்த ராஜபக்ஸ மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு தெரிவித்திருக்கின்றார். இந்த வெற்றியின் உண்மையான கர்த்தாக்களே எமது வடகிழக்கிலே உள்ள தமிழ் மக்கள் தான்.

முஸ்லீம் மக்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் எல்லா காலங்களிலும் வாய்ப்புகளையும் வசதி வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டிருந்தவர்கள். ஆனால் அவர்களுடைய இந்த அரசியல் மாற்றம் மிகச்சிறந்த பாடத்தைக் காட்டி இருக்கின்றது. அது நாங்கள் கடைப்பிடித்து வந்த பாதை.

மாகாணசபையில் கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் எமக்கு புத்தி சொல்லியிருக்கின்றார்கள். நீங்கள் முஸ்லீம் அரசியல்வாதிகளைப் பின்பற்ற வேண்டும். முஸ்லீம் காங்கிரஸை பின்பற்ற வேண்டும் என்று. ஆனால் முஸ்லீம் காங்கிரஸிற்கு என்ன நடந்தது என்று யாவரும் அறிவர். முஸ்லீம் மக்களின் வணக்கஸ்தலம் மீது பௌத்த அமைப்புகள் எப்போது தாக்குதல் நடாத்தியNதூ அதனை இந்த அரசு கண்மூடிக் கொண்டு பாராமுகமாக இருந்ததோ அன்றிலிருந்து முஸ்லீம் மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.நாங்கள் 57க்கு முன்பே எமது தலைவர்கள் இந்த நிலையை சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

இங்கு பிள்ளையாரைத் தூக்கிவிட்டு புத்தரை வைத்தாலும் எங்களுக்கு பரவாயில்லை என்று கூறிய அரசியல் ஞானிகள் கொஞ்ச நாட்களின் முன்பு எமது மக்கள் மத்தியில் பரப்புரைகள் செய்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றையும் கெடுக்கின்றது. இங்கு வருகின்ற அபிவிருத்தியையெல்லாம் கெடுக்கின்றது கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியைக் கெடுக்கின்றது என்றெல்லாம் கூறினார்கள்.

இந்த அபிவிருத்தி எல்லாம் எல்லா காலத்திலும் இருந்தவையே. வெள்ளையர்கள் செய்யாத அபிவிருத்தியா இங்குள்ள வீதிகள் முதல் கல்வி வரையிலும் அவர்கள்தான் எமக்கு தந்தார்கள் அதற்காக அவர்கள் இங்கே இருக்கட்டும் என எம் முன்னோர்கள் நினைத்திருந்தால் எமது நாடு வெள்ளைக்காரர்களின் நாடாக மாறியிருப்பதுடன் நாம் அடிமைகளாகவே இருந்திருப்போம். ஆதனால்தான் எமது முன்னோர்கள் எமது நாட்டின் வருவயை வைத்து நாமே எமது நாட்டில் அபிவிருத்திகளைச் செய்கின்றோம் என்று வெள்ளைக்காரர்களைத் துரத்தினார்கள்.

அதுபோல்தான் நாங்களும் எமது வடக்கு கிழக்கில் இருக்கின்ற வருமானங்களை வைத்துமுக் கொண்டு இந்த வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்கின்ற உரிமையை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்கின்றோம். நாம் ஒரு காலத்தில் பிரிந்து பேக கேட்டோம் ஏன் அவ்வாறு கேட்டோம். நாம் இங்கு நெருக்குவாரத்திற்குள் உள்ளாக்கப்பட்டோம் இதனால்தான் நாம் பிரிவிiனியக் கேட்டோம். இதனால்தான் தமிழீழ கோரிக்கை உண்டானது.

இங்கிருந்த பெரும்பாண்மை அரசாங்கங்கள் நாங்கள் செய்வதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணப்பாடோடு இருந்தது. தமிழீழம் என்பது கிடைத்தால் நல்லது தான் ஆனால் ஒரு சிறிய தீவிற்குள் வடகிழக்கு மக்கள் ஒரு மொழி பேசுகின்ற ஒரு கலாச்சாரம் கொண்ட மக்கள் அவர்கள் தனியாக வாழக்கூடிய விதத்தில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.

வெற்றியீட்டிய பெருமிதத்தில் நிலத்தை முத்தமிட்டார். அந்த வெற்றியை வைத்துக் கொண்டுதான் அவ்வளவு காலமும் அவர் அரசியல் நடத்தி வந்தார்.

அன்று தமிழர்களைப் பணயம் வைத்து தமிழர்களை கொன்று பெற்ற வெற்றியினால் ஆட்சி நடாத்தி பின்னர் அது குடும்ப ஆட்சியாக மாற்றி இலங்கை அரசில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அவர்களின் ராஜபக்ஸ குடும்பத்தினர் நிர்வாகத்திலே இருந்திருக்கின்றார்கள். அமைச்சர்கள் எல்லாம் பொம்மைகளாக இருந்தார்கள். இதுதான் அவர்களுக்குள் எழுந்த பிரச்சினை.

ஆனால் எமது பிரச்சினை அதுவல்ல எங்களுடைய உரிமைகள் ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே இந்தத் தேர்தலில் நாம் முன்வைப்பாக இருந்தது இந்த நாடு தனித்து சிங்கள பௌத்தர்களுக்கு உரியதா அல்லது இந்த நாட்டில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் உரியதா இது பன்மைத்துவம் மிக்க நாடா என்றுதான் கேட்டோம். இதில் இந்த நாடு பண்மைத்துவம் மிக்க நாடு எனும் கருத்து வென்றிருக்கின்றது.

எனவே இப்போது தெரிவு செய்யப்ட்டிருக்கும் ஜனாதிபதிக்கு பாரிய பொறுப்பு என்னவென்றால் இது பண்மைத்துவம் மிக்க நாடு என்பதைக் கருத்தில் கொண்டு இங்கு இருக்கக் கூடிய சகல மக்களும் சமமாக மதிக்கப்படக் கூடிய வகையில் ஒரு தீர்வினைக் கொண்டு வர வேண்டும்.

தற்போது கிழக்கு மாகதாகணத்தில் ஆளும்தரப்பு நடுக்கம் கண்டு இருக்கின்றது. எதிர்வரும் 12ம் திகதி மாகாணசபை வரவு செலவுத் திட்டம் வரப் போகின்றது இதனை பழைய ஆளும் தரப்பு தான் கொண்டு வந்தது. தற்போது ஆளும்தரப்பு இல்லை எனவே மாகாணசபையிலும் ஒரு மாற்றம் ஏற்படப் போகின்றது. அவ்வாறு மாகாணசபையில் ஒரு மாற்றம் ஏற்பட்டால் பலர் பல்வேறு விதமாக பலவாறு கூறுகின்றார்கள் அது சில காலங்களின் பின்னர் தான் எமக்கு தெரியும். அதில் புதிய அரசாங்கம் அமையும் சூழ்நிலை உருவாகும் சாத்தியம் இருக்கின்றது. அவ்வாறு ஏற்படும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் மிகவும் முக்கியயமான பங்கெடுக்கும் அவ்வாறு அமைகின்ற போது எமது மக்களின் விடயங்களையெல்லாம் நாம் கவனத்தில் கொண்டுதான் செயற்படுவோம்.

மத்திய அரசாங்கத்தில் எமது கட்சிக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவிருக்கின்றன. ஆனால் எம்மைப் பொறுத்தமட்டில் நாம் கொள்கை அடிப்படையில் இருப்பவர்கள் என்பதனால் உடனடியாக இந்த அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. இந்த 100 நாள் திட்டம் இருக்கின்றது இதில் தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் எவ்வாறு வழங்கப்படவிருக்கின்றது என்பதன் அடிப்படையில் தான் நாங்கள் இதனை ஏற்பதா இல்லையா என்பது பற்றி நாம் சிந்திப்போம்.

எம்மைப் பொறுத்த மட்டில் எமது மக்களின் நடைமுறைப் பிரச்சினைகளாக வீடுகள் இழந்தவர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும், விதவைகளுக்கு வாழ்வழிக்கப்பட வேண்டும், போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களின் வாழ்வு சிறப்புற இடமளிக்க வேண்டும், தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கபட்டிருக்கின்ற இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், எமது பகுதிகள் புனர்நிர்மானம் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற அடிப்படை விடயங்களை நாம் முன்வைப்போம்.

அதற்கு அடுத்த படியாக எங்களுடைய அரசியல் விடயங்களை முன்வைப்போம் இவற்றையெல்லாம் எந்த அளவிற்கு இந்த ஜனாதிபதி அவர்களால் செய்யமுடியும் என்று எமக்குத் தெரியாது. ஏனெனில் இதில் பல விதமான கூட்டுகள் உண்டு. ஏனெனில் இங்கு பல பேரினவாத கட்சிகள் இருக்கின்றன.

ஆனால் அங்கு சந்திரிக்கா அவர்களும், மங்களசமரவீர, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் அங்கு இருக்கின்றார்கள். இவர்களெல்லாம் தமிழ் மக்களுடைய விடயங்களை உணர்ந்து கொண்டவர்கள். எனவே காலம் மாறி வந்திருக்கின்றது. இந்த வெற்றி உங்களுடைய வெற்றி என்று தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum