Top posting users this month
No user |
சலுகைகளை வழங்குவதனூடாக எம் உரிமையை யாரும் விலைபேச முடியாது: மருதங்கேணி மக்கள் தெரிவிப்பு
Page 1 of 1

சலுகைகளுக்காக எம்மினத்துக்கு ஒரு போதும் துரோகம் செய்வதற்கு நாம் தயாரில்லை, சலுகைகளை வழங்குவதனூடாக எமது தேசிய உரிமையை யாரும் விலைபேச முடியாது.
எங்களின் சுதந்திரத்துக்காக உரிமைகளுக்காக பல விலைகளைக் கொடுத்தவர்கள் வடமராட்சிக்கிழக்கு மக்கள் எங்கள் மண்ணிலிருந்து துரோகத்தனமான வரலாறு உருவெடுப்பதற்கு யாரையும் அனுமதியோம். என வடமராட்சிக்கிழக்கு மருதங்கேணி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களிடம் மக்கள் பல கோரிக்கைகளையும் முன்வைத்தார்கள்.
15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற வடமராட்சிக்கிழக்கில் ,துவரை மக்களுக்கு பாரிய பிரச்சனையாக அமைவது வீதி. வீதி சீரின்மையால் காப்பாற்றப்பட வேண்டிய உயிர்களைக்கூட நாம் இழக்க வேண்டியிருந்தது. வடமராட்சிக்கிழக்கினை முதன்மைப்படுத்தி எமக்காக குரரெழுப்பி வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தற்போது உள்ள மைத்திரி அரசோடு பேசி எமக்கு தக்க பதிலை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்த மக்கள் சந்திப்பில் மருதங்கேணி மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் பசுமைத்தேசத்தின் கீழ் விதைதானியமும் வழங்கப்பட்டது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை வடமராட்சிக் கிழக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கரன். கிளிநொச்சி இளைஞரணியின் செயலாளர் சர்வானந்தா வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தலைவர் திரவியம் என பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum