Top posting users this month
No user |
அதர்மவாதிகள் நிலையாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை: சி.சிறீதரன் எம்.பி
Page 1 of 1

தர்மத்தின் விரோதிகள் இம்மண்ணுக்கே பாரமானவர்கள். தர்மத்தின் வழி நின்று போராடிய எமது விடுதலை வேட்கையை அழித்த அதர்மவாதிகள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. இவர்கள் நீதி தேவதையின் முன் தண்டிக்கப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுதந்திரபுரம் வசாவிளான் பகுதி மக்களுக்கு பசுமைத் தேசத்தின் கீழ் விதை தானியங்களை வழங்கிவைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தங்களின் ஜென்ம கொடுங்கோலாட்சியாளனுக்கு தக்கநேரத்தில் தக்க பதிலடியை வழங்கியிருக்கிறார்கள்.
காலம் காலமாக ஆட்சிப்பீடமேறிய சிங்களத் தலைமைகள் எம்மின சுதந்திர வேட்கையை அழித்தொழிப்பதிலேதான் கங்கணம் கட்டி நின்றார்களே தவிர, எம்மினத்தின் விடுதலை பற்றி சிந்திக்கத் தவறிவிட்டனர்.
இதற்கான பதிலை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதற்கேற்றால் போல தக்க நீதியை தமிழர்களுக்கு தற்போதுள்ள மைத்திரி அரசாங்கம் வழங்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் புன்னாலைக்கட்டுவன் கிளைக் குழுத் தலைவர் லோகன், சுதந்திரபுர கிராம அபிவிருத்தி சங்கத்தலவைர் சிங்கம் நவம், விண்மீன் விளையாட்டுக் கழகத்தலைவர் சிறீவண்ணம் எனப்பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum