Top posting users this month
No user |
Similar topics
இந்த நாட்டில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களே: த.கலையரசன்
Page 1 of 1

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பலம் எவ்வாறு அமைந்திருந்தது என்ற செய்தியினை தென்னிலங்கையில் உள்ள சிங்களத் தலைமைகளுக்கு புலப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
இலங்கையில் 7வது ஜனாதிபதியாக வருவதற்கு போட்டியிட்டு வெற்றியீட்டிய எதிரணி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி தொடர்பாக கருத்துக் கூறும் போதே இதனைத் தெரிவித்தார்.
இவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்
உண்மையில் வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் எந்த அற்பசொற்ப ஆசைகளுக்கும் துணை போனவர்கள் அல்ல. மாறாக உரிமைக்காகவும் தமது இனத்தின் விடுதலைக்காகவுமே அன்றிருந்து இன்று வரைக்கும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை இந்த தேர்தல் மூலம் நிருபித்திருக்கின்றார்கள்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மகிந்த ராஜபக்ச தேர்தல் மேடைகளில் முழங்கிய முழக்கம் தமிழ் மக்களின் வாக்கு எனக்குத் தேவையில்லை நான் எனது பெரும்பான்மையினத்தின் வாக்குப்பலத்தின் மூலம் வெற்றி வாகை சூடுவேன் என்று மமதை கொண்டதன் வெளிப்பாடே இன்று அவருக்கு நேர்ந்த கதியென்று கூட கூறமுடியும்.
இந்த நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டின் ஜனாதிபதியினை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என்பதனை மறந்து செயற்பட்டதன் விளைவே அவர் தோல்வி அடைவதற்கான காரணம் என்று கூட கூறலாம்.
இவர் சார்ந்த அரசாங்கத்தினை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றி எதிரணி வேட்பாளரான மைத்திரிபாலவை ஆட்சி பீடம் ஏற்றியதற்கு வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது.
தற்போது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்வது,
இந்த நாட்டிலே அனைத்து இன மக்களும் அனைத்து உரிமைகளையும் பெற்று அவரவர் கலை கலாசாரங்களை பின்பற்றுவதற்கும், அவர்களுக்குரிய மதத்தினை பின்பற்றி நடப்பதற்கும் இந்த ஜனாதிபதி அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதுடன், ஒரு இனம் இன்னுமொரு இனத்தின் நிலத்தினை துண்டாடுவதற்கோ, அபகரிப்பதற்கோ இடமளிக்காமல் பாதுகாக்க வேண்டியது இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் உங்களைச் சாரும்.
இவ்வாறான நல்ல விடயங்களை அனைத்து மக்களும் விரும்பக்கூடிய விதத்தில் செய்யவேண்டும். அதன் போதுதான் எதிர்வரும் காலம் அனைத்து சமூகத்திற்கும் சுபீட்சம் நிறைந்ததாக அமையும் எனவும் இவரது வெற்றிக்காக உழைத்த எமது வடகிழக்கு மாகாணங்களில் உள்ள குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் த.தே.கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாட்டில் ஆட்சி மாத்திரம் தான் கைமாறியுள்ளது,வேறு ஒன்றும் பெரிதாக மாறவில்லை: கலையரசன்
» இலங்கையின் எதிர்கால அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும்!- செல்வம் எம்.பி.
» தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்! கடுமையான தொனியில் ஜனாதிபதியை அணுக கூட்டமைப்பு முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum