Top posting users this month
No user |
விபத்தில் சிக்கிய காரில் இருந்து கொட்டிய பணமழை: அள்ளிச்சென்ற மக்கள்
Page 1 of 1

கோயம்புத்தூரில் அரசு பேருந்துடன் மோதி விபத்தில் சிக்கிய காரில் பணமழை கொட்டியுள்ளது.
கோவை மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து அரிசிபாளையம் நோக்கி நேற்று காலை 8.40 மணிக்கு அரசு பேருந்து ஒன்று சென்ற போது போடிபாளையம் அருகே அவ்வழியாக வந்த சொகுசு கார் மீது பேருந்து மோதியது.
இதில் காரை ஓட்டிய ஓட்டுநர், கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த யாசர் அராபத் (26), முன் பக்க சீட்டில் உட்கார்ந்திருந்த ஜாபர் (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
காரின் பின் பக்க சீட்டில் இருந்த ஜலீல் (41) என்பவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. விபத்தின்போது காரில் கதவில் இருந்தும், டேஷ் போர்டில் இருந்தும் பணக்கட்டுகள் கொட்டியது.
மேலும், பெரிய மூட்டை ஒன்று சிதறி ரோட்டில் விழுந்தது. அதில், 500 ரூபாய் கட்டுகளாக இருந்தன. ரோட்டில் பண கட்டுகள் சிதறியதை கண்ட பேருந்து பயணிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வேட்டி, சேலையில் பணக்கட்டுகளை போட்டுக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மதுக்கரை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிசார் விரைந்து சென்று காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகளை யும், ரோட்டில் சிதறிக் கிடந்த பணக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
காவல் நிலையத்தில் வைத்து பணக்கட்டு மூட்டையை பிரித்து எண்ணப்பட்டதில் இதில் 248 கட்டுகளாக 2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 800 ரூபாய் இருந்தது.
800 ரூபாய் தவிர மற்ற அனைத்தும் 500 ரூபாய் தாள்களாக இருந்தது. சில கட்டுகளில் வங்கிகளில் பெறப்பட்ட ரசீதும் காணப்பட்டது.
இவ்விபத்தில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஜலீல், ஜாபர், யாசர்அராபத் ஆகியோர் கடந்த 3ம் திகதியில் இருந்து காரில் சுற்றி கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 3ம் திகதி கொச்சின் விமான நிலையம் சென்றுள்ளனர். பின்னர் மைசூர், பெங்களூர், சென்னை என பல்வேறு இடங்களில் இவர்களில் காரில் சுற்றியுள்ளனர்.
நேற்று காலை ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் சீட்டுக்கு அடியில் தார் பாய் மூலமாக பணத்தை மூட்டையாக கட்டி வைத்திருந்தனர்.
விபத்து ஏற்பட்டபோது பணம் சிதறி விட்டது. அனைத்து பணமும் விமானம் மூலமாக வந்திருக்கலாம் என வருமான வரித்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதைதொடர்ந்து பணம் அனைத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum