Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த- மைத்திரி காலையில் வாக்களிப்பு - மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு
Page 1 of 1

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வீரகெட்டிய மெதமுலன டி.ஏ. ராஜபக்ஷ மகா வித்தியாலத்தில் இன்று காலை வாக்களித்தார்.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்நறுவை புதிய நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் வாக்களித்தார்.
ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.
இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதுடன் வாக்காளர்கள் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்களிப்பதற்காக 15044490 வாக்காளர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 12314 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.
தபால் மூல வாக்களிப்பு குறித்த முடிவுகள் இன்று இரவு 10.00 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது.
காலையில் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு
மேல் மாகாணத்தில் இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்தவுடன் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை காலமும் மக்கள் காலை நேரத்தில் மந்தகதியிலேயே வாக்களிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக மேல்மாகாணத்தில் குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்தவுடனேயே கூட்டமாகச் சென்று நீண்ட வரிசையில் நிற்பதனைக் காணக்கூடியதாகவுள்ளது.
மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால வாக்களிப்பு
தொண்டமான் வாக்களித்தார்
முஸ்லிம்கள் வாக்களிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று தமது வாக்குகளை பதிவு செய்தனர்.
இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி - மஹிந்த அணியினரிடையே பிளவு பூதாகாரமாகியுள்ளது!
» மைத்திரி – மஹிந்த சந்திப்பு! ஜே.வி.பி கடும் கண்டனம்
» மைத்திரி – மஹிந்த சந்திப்பு இடம்பெறவில்லை!– மஹிந்தவின் ஊடக பேச்சாளர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum