Top posting users this month
No user |
Similar topics
ஜெயிக்கும் குதிரை
Page 1 of 1
ஜெயிக்கும் குதிரை
ஜெயிக்கும் குதிரை
விலைரூ.95
ஆசிரியர் : வால்டர் வியெரா
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்: 978-81-8476-100-9
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
படித்து முடித்து பட்டம் வாங்கியாகிவிட்டது. அடுத்து வேலைக்கு மனு போடவேண்டும். அழைப்பு வந்தால் நேர்காணலுக்குச் செல்லவேண்டும். எதிரில் உட்கார்ந்திருக்கும் உயரதிகாரிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் பேச்சும் பாவனையும் அமையவேண்டும். பணியில் சேரவேண்டும். உழைத்து முன்னுக்கு வந்து உயரத்தைத் தொடவேண்டும்.
கல்லூரியிலிருந்து அப்போதுதான் வெளியே வந்து புதுக் காற்றை சுவாசித்து, புத்தம் புது சூழலைச் சந்திக்க நேரிடும் இளைஞர்களுக்கு மேலே குறிப்பிட்டவை எல்லாமே மலைப்பாக இருக்கும். எப்படி எதிர்கொள்வது? என்ற கேள்வி பூதாகரமாக அவர்கள் முன் நிற்கும்!
ஜெயிக்கும் குதிரை என்னும் இந்த நூல், பணி நிமித்தம் புதிய பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து உதவும் .
வேலைக்கு விண்ணப்பம் செய்வது முதல், வேலையில் சேர்ந்து அந்த நிறுவனத்தோடு நீங்கள் மேலும் மேலும் வளருவது வரையில் இந்தப் புத்தகத்தில் நிறைய டிப்ஸ்கள் உங்களுக்குக் கிடைக்கும். அதேபோல், அலுவலக உதவியாளர் முதல் நிறுவனத் தலைவர் வரை உள்ள அனைவருக்கும் இதில் தரப்பட்டுள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும். உளவியல்பூர்வமாகவும் சில பிரச்னைகள் இந்நூலில் ஆராயப்பட்டிருப்பது கூடுதல் கனம் தருகிறது.
சேஜ் பப்ளிகேஷன்ஸ் ஆங்கிலத்தில் வெளியிட்ட வின்னிங் மேனேஜர்ஸ் புத்தகத்தின் தமிழ் வடிவம்தான் இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் முழுக்க முழுக்க நூலாசிரியர் வால்டர் வியெராவின் அனுபவ முத்துக்கள்! இயல்பான, எளிமையான தமிழில் இந்தக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ஜி.எஸ்.எஸ்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum