Top posting users this month
No user |
Similar topics
இன்றும் நாளையும் பேரணிகள் ஊர்வலங்கள் நடத்த தடை- வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்
Page 1 of 1

இன்றும் நாளையும் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசம் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அனைத்து கட்சி செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
வேட்பாளர் ஒருவர் அல்லது கட்சியொன்றின் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டங்கள், காணாமல் போன அல்லது உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து நடத்தப்படும் நிகழ்வுகள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வேட்பாளரை போற்றும் வகையிலோ வேட்பாளரை தூற்றும் வகையிலோ ஊடகங்கள் தகவல்களை வெளியிடக் கூடாது. இவ்வாறு செயற்படும் ஊடகங்கள் தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
குறிப்பாக சில அரசாங்க ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்குச் சாவடிகளை கண்காணிக்கும் பணிகளை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளனர்.
வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் வாக்களிப்பின் பொருட்டு இன்று முற்பகல் முதல் சகல வாக்கு பெட்டிகளும் விசேட காவல்துறை பாதுகாப்புடன் மாவட்ட செயலாளர் காரியாலங்களில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.
வாக்கு பெட்டிகளுடன் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்கு பெட்டிகளும் ஆவணங்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
22 தேர்தல் மாவட்டங்களில் 12 ,313 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளன.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் அதிகாரிகள் வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்றும் நாளையும் எந்த விதமான ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு பேரணிகள் மற்றும் பாதையாத்திரைகளை ஒழுங்கு செய்யாதிருக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர், சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதே வேளை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படும் என்று மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல அரசாங்க பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தத் தடை
» மீரியபெத்த மக்களுக்கு தனி வீடுகள்: பணிகள் மார்ச்சில் ஆரம்பம்
» வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது: வவுனியாவில் தாமதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum