Top posting users this month
No user |
Similar topics
திகிலூட்டும் திருச்செந்தூர் கோயில்! பதற்றத்தில் பக்தர்கள்
Page 1 of 1

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு வரும் குழந்தைகள் அடுத்தடுத்து மாயமாவதால் அங்கு வரும் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலாகும்.
இந்த கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினந்தோறும் ஆயிக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். பக்தர்கள் அங்குள்ள கோயிலுக்கு சொந்தமான விடுதிகளிலும், மண்டபங்களிலும் குடும்பத்துடன் தங்கியிருந்து கடலில் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் சாத்தூரை அடுத்த ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த ராஜதுரை, பாலசுதா தம்பதியர் கடந்த டிசம்பர் 30ம் தேதி திருச்செந்தூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
அங்கு சரண் மண்டபம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களின் மூன்றரை வயது மகன் சற்று நேரத்தில் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோவில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதேபோல் சிவகாசி ஆணையர் கணபதி மகள் மனிஷா என்பவரும் மாயமானதாக கூறப்படுகிறது. இந்த இருவர் குறித்தும் இதுவரை எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் திருச்சி காட்டுமன்னூரை சேர்ந்த இளங்கோவன் தனது மனைவி சுதா மற்றும் மகள் அஸ்வினியுடன் திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ய கடந்த 3ம் திகதி சென்றுள்ளார்.
அங்குள்ள கல் மண்டபத்தில் அனைவரும் உறங்கினர். மறுநாள் காலையில் எழுந்த பார்த்த போது குழந்தை அஸ்வினியை காணவில்லை. இதையடுத்து கோயில் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பட்டாணி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கோவிலுக்குள் பக்தர்கள் போர்வையில் உலாவும் குழந்தை கடத்தல் கும்பல்கள், பெற்றோர்களின் அருகில் இருந்தாலும் அவர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு குழந்தைகளை கடத்தி சென்று விடுவதாக கூறப்படுகிறது. இந்த தொடர் சம்பவங்கள் அங்கு செல்லும் பக்தர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீரா வினைகள் தீர்க்கும் திருச்செந்தூர்
» திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
» திருச்செந்தூர், பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை பாதயாத்திரைப் பாடல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum