Top posting users this month
No user |
''ஜில்மாட் செய்ய முடியாது! மஹிந்த படித்த பாடசாலையில் நான் தான் ஹெட் மாஸ்டர்" - மைத்திரி
Page 1 of 1

ஒரு ஜில்மாட் செய்ய முடியாது மஹிந்த சென்ற பாடசாலையில் நான் தான் ஹெட் மாஸ்டர். அது அவருக்கு நன்கு தெரியும் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மைத்ரிபால சிறிசேன அவர்கள் வெற்றிபெற்றும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பதவியை விட்டு போகாமல் இருந்தால் அவரை வெளியேற்ற தங்களிடம் மாற்றுத்திட்டம் ஒன்று இருப்பதாகவும் அதனை இப்போது சொல்ல முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ள நிலையில்,
நேற்று கொழும்பில் நடந்த மைத்திரியின் கடைசி தேர்தல் பிரசார கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுள் இருவரில் ஒருவரான மேல் மாகாணசபை உறுப்பினரும், மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைருஸ் ஹாஜியார் நேற்றிரவு மருதானை பிரசார மேடையில் வைத்து பொது வேட்பாளரிடம் " மக்கள் நம்மோடு உள்ளனர், ஆனால் எதாவது மஹிந்த ஜில்மாட் செய்ய வாய்ப்பு உள்ளதா ? என வினவியுள்ளார்.
இதற்கு புன்னகையுடன் பைரூஸ் ஹாஜியாரிடம் பதில் அளித்துள்ள மைத்திரிபால சிறிசேன " ஒரு ஜில்மாட் செய்ய முடியாது மஹிந்த சென்ற பாடசாலையில் நான் தான் ஹெட்மாஸ்டர் அது அவருக்கு நன்கு தெரியும்" என குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர நேற்று திரண்ட லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தினை கண்டு பிரமித்து போன மைத்திரி பிரசாரக் கூட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்ட ஏற்பாட்டாளர்களான மேல்மாகாண சபை உறுப்பினர்கள் பைரூஸ் ஹாஜியார், முஜீபுர் ரஹ்மான் ஆகியோருக்கு தனிப்பட்ட ரீதியில் தனது நன்றியை தெரிவித்துள்ளர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum