Top posting users this month
No user |
Similar topics
பொய் சொல்லி வெல்வதை விட உண்மை சொல்லித் தோற்பது மேல்
Page 1 of 1

சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் தந்தையார் சுதிராம் மேற்கு வங்கத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் தனது உறவினர்களுடன் திருவெண்ணா மலைக்குச் சென்று கடவுள் தரிசனம் செய்யப் புறப்பட்டார்.
எனினும் இந்திய உபகண்டத்தின் சில இடங்களில் பிளேக் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தமையினால் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் திருவெண்ணாமலைக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதற்காக ஒரு சோதனைச் சாவடி அமைத்து திருவெண்ணாமலைக்குச் செல்கின்றவரகள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றிய விசாரணை நடத்தப்பட்டது.
கஷ்ட காலத்திற்கு சுதிராம் வாழ்ந்த இடத்திலும் பிளேக் நோய் பரவியிருந்ததால் சுதிராமின் உறவினர்கள் தங்களின் சொந்த இடங்களை மறைத்து வேறு இடங்களைக் கூறிவிட்டு திருவெண்ணாமலைக்குச் சென்றனர்.
ஆனால் சுதிராம், தான் மேற்கு வங்காளத்தில் இருந்து வருவதை சோதனைச் சாவடியில் தெரிவித்தார். அதனால் திருவெண்ணாமலைக்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட, சுதிராம் தனது ஊருக்குத் திரும்பினார்.
திருவெண்ணாமலைக்குச் சென்று திரும்பிய சுதிராமின் உறவினர்கள்; சுதிராமிடம் ஒரு பொய் சொல்லிவிட்டு திருவெண்ணாமலைக்கு வந்திருக்கலாமல்லவா? என்றனர்.
இதற்கு இராமகிருஷ்ணரின் தந்தை சுதிராம், பொய் சொல்லிவிட்டு கடவுளைத் தரிசிப்பதை விட, உண்மை சொல்லி விட்டு வீடு திரும்புவது மேல் என்றார்.
சுதிராமின் நேர்மைதான் இராமகிருஷ்ண பரம ஹம்சர் என்ற மகானுக்கு அவரைத் தந்தையாக்கியது.
ஆம், எப்போதும் நேர்மை என்பது மிகவும் முக்கியமானது. எனினும் பலரிடம் இந்த நேர்மைத்தனம் இல்லாமல் அழிந்து போனமை வேதனைக்குரியது.
நாளை மறுதினம் 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலில் பதவியைப் பிடிப்பதற்காக நடக்கும் சுத்துமாத்துக்களை நினைக்கும் போது, இதென்ன கொடுமை என்றாகிறது.
ஒரு வேட்பாளரின் பெயரில் இன்னொரு வேட்பாளர்; அதே தோற்றம்; தேர்தல் சின்னம் மட்டுமே வேறுபட்டது.
இரண்டும் ஒன்று என நினைத்து மக்கள் குழம்புவர். அந்தக் குழப்பத்தில் வாக்குகள் சிதறும் என்பது ஏற்பாட்டாளர்களின் எண்ணம்.
கடவுளே! மக்களை முட்டாள் ஆக்கும் ஒரு தேர்தல் பிரசாரம் தேவைதானா என்ன? ஜனாதிபதி என்பது இந்த நாட்டின் அதி உயர்ந்த அதிகாரம் கொண்ட பதவி.
அந்தப் பதவியில் இருப்பதற்காக மக்களை ஏமாற்ற நினைப்பது படு முட்டாள் தனமல்லவா? இத்தகையை ஏமாற்று வழிகளைக் கையாண்டு வெற்றி பெற்றால் மக்கள் முட்டாள்கள் என்பதாகி விடும்.
எமது நாட்டு மக்களை முட்டாள்கள் ஆக்கி அந்த முட்டாள்தனத்தில் வாக்குப் பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்க நினைப்பது மிக மோசமான செயல்.
இது தவிர, வாக்களிக்கும் இடங்களில் இரகசியக் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதான பொய்ப் பிரசாரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
எப்படி எல்லாம் திருகுதாளங்கள் விட முடியுமோ அப்படியெல்லாம் திருகுதாளம் செய்து பதவியைப் பிடிப்பது பதவிக்கும் நாட்டுக்கும் பேராபத்தைத் தரும்.
ஆம், பொய் சொல்லி தேர்தலில் வெல்வதை விட, உண்மை சொல்லித் தோற்பது எவ்வளவோ மேல் என்று நினைப்பவனே உத்தமமான தலைவனாக இருக்க முடியும்.
எதுவாயினும் பொதுமக்கள் மெய்ப் பொருள் காண்பது அறிவு என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொல்லித் தர நாங்க ரெடி!
» ஐ.நா அறிக்கை தொடர்பில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: அரசாங்கம்
» சிறுவனுக்கு சிகிச்சையளிக்கவென பொய் கூறி பொதுமக்களிடம் நிதி சேகரித்த பெண்கள் இருவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum