Top posting users this month
No user |
குழந்தைகளைத் தாக்கிய இராணுவ மிருகங்கள்: மூச்சு விடத் தவிக்கும் குழந்தை
Page 1 of 1

கிளிநொச்சி பாரதிபுரம் வடக்கில் நேற்று மாலை ஆறு வயதான பிரிந்தா மற்றும் இரண்டரை வயதான கீதா ஆகிய குழந்தைகள் வீதியோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் உள்ள இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினர் இந்த குழந்தையில் ஒன்றை காலால் உதைத்துச் சென்றதுடன் மற்றைய குழந்தைக்கு கையால் இராணுவ மிருகங்கள் இரக்கமற்ற முறையில் அறைந்துள்ளனர்.
இதை கண்ட இந்தப்பிள்ளைகளின் மாமனாரான சந்திரகுமார் என்பவர் இராணுவத்தினரிடம் இந்தச்சம்பவத்துக்கு நியாயம் கேட்டபோது அவர் மீது இராணுவம் மிகமோசமான தாக்குதலை நடாத்தியது.
இதனால் அவரின் தலையில் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. இந் நிலையில் அப்பகுதி மக்கள் இராணுவத்தின் இந்த அடாவடித்தனத்துக்கு எதிராக திரண்டனர்.
இந் நிலையில் பாரதிபுர இராணுவ அதிகாரிகள், தாக்குதல் நடத்திய இராணுவச்சிப்பாய்க்கு மூளை சுகமில்லை பைத்தியம் என கதையை முடிக்க முற்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் அடாவடித்தன இராணுவத்தின் இந்த மிலேச்சத்தனத்தால் அப்பகுதி ஏழை மக்கள் கொதிப்பும் அச்சமும் அடைந்துள்ளனர்.
முன்பு 90களில் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் இப்படித்தான் இராணுவச்சிப்பாய் துப்பாக்கிப்பிரயோகம் செய்த நிலையில் அந்த இராணுவத்துக்கு பைத்தியம் என கதையை முடித்தது அரசாங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
(இரண்டாம் இணைப்பு)
கிளிநொச்சியில் இரு சிறுவர்கள் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல்!
கிளிநொச்சி- பாரதிபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீதும் சிறுவர்களின் மாமன் மீதும் படைச்சிப்பாய் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குறித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுவர்களின் தயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நேற்றய தினம் மாலை 3.30மணியளவில் எனது பிள்ளைகளான பி.பிருந்தா(6வயது) பி.கிருஷாந்த் (வயது2) இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீதியினால் வந்த படைச்சிப்பாய் ஒருவர் என் மகளுக்கு அடித்தார். பின்னர் மகனுக்கும் அடித்து கீழே தள்ளியதுடன் காலால் மிதித்துக் கொண்டு நின்றுள்ளார். இதனை வீட்டுக்கு முன்னால் நின்றிருந்த பிள்ளைகளின் மாமனார் பார்த்துவிட்டு எதற்காக பிள்ளைகளை அடிக்கிறீர்கள்? என கேட்டதற்கு அவர் மீது தகர வாளியினால் அடித்துள்ளார்.
இதனால் அவர் தலையில் படுகாயமடைந்தார். பின்னர் எங்கள் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஊடாக உடனடியாக படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வந்து குறித்த சிப்பாயை பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் சிறுவர்களையும், தம்பியையும் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றோம்.
மேலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கும் சென்று முறைப்பாடு கொடுத்திருந்தோம். இந்நிலையில் நேற்றய தினம் இரவு எங்கள் வீட்டிற்கு வந்த படையினர் நாங்கள் கொடுத்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினர். அதேபோன்று என் தம்பியையும் அவர்கள் அச்சுறுத்தினர். இதனால் இன்று நாங்கள் முறைப்பாட்டை வாபஸ் பெற்றோம்.
ஆனால் அடித்த படைச்சிப்பாய்க்கு மனநோய் எனக்கூறி தாங்கள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பியிருப்பதாக கூறியிருக்கின்றார்கள். எனக்கு கணவர் இல்லை. தனியாக வாழ்கிறேன். என் 2 வயது மகன் மூச்சு விட முடியாத நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum