Top posting users this month
No user |
கூட்டமைப்புக்கு பிச்சைக்காரனின் புண்ணைப்போல இனப்பிரச்சினை!- செய்தியாளர்களிடம் ஜனாதிபதி செவ்வி
Page 1 of 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பிச்சைக்காரனின் புண்ணைப் போல் வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவதிலேயே நாட்டம் காட்டி வருகின்றது. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர்கள் உள்ளூரில் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அமெரிக்கா, ஜெனீவா ஆகிய நாடுகளிலேயே தீர்வை தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நான் தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. என்னால் மாத்திரம் ஒரு தலைப்பட்சமாக தீர்வு வழங்குவது சாதகமாக இருக்காது.
13வது அரசிய லமைப்புத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் கூட முன்வைக்கப்படாமல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில் வாராந்த பத்திரிகைகளின் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்தார்.
அவரது செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது,
கேள்வி:– இந்த ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதாக நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்:– எனக்கு இத்தேர்தலில் போட்டியே இல்லை. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் போட்டியை எதிர்நோக்குகின்றேன். ஆனால் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் கிராம பிரதேசங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவான அலை வீசிக்கொண்டிருக்கிறது.
கேள்வி:– யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வாழ்க்கைச் செலவு குறையவில்லை. இதற்கான காரணம் என்ன?
பதில்:– யுத்தம் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது. கடந்த 4 வருடங்களாக அபிவிருத்திக்கு அடிப்படையான அடித்தள அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகின்றோம். கல்வி முறையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. சிறந்த நிர்வாகம் காணப்படுகின்றது. சட்டத்துறை சீரழிந்துள்ளதாக எதிரணியினர் குற்றஞ்சுமத்துகின்றனர். ஆனால், அதில் உண்மையில்லை.
கேள்வி:– அமைச்சரவையில் அமைச்சர்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிட முடியாதுள்ளதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது. அரசிலிருந்து வெளியேறி பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவும் இது குறித்து மேடைகளில் பேசி வருகின்றார். இதன் உண்மைத் தன்மை என்ன?
பதில்:– சுகாதார அமைச்சு சார்பில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள் பல தடவைகள் வாபஸ் பெறப்பட்டன. இது குறித்து நான் மூன்று தடவை எச்சரிக்கை விடுத்தேன். அமைச்சரவையில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, விமல் வீரவன்ச, ஆகியோர் ஒழிவு மறைவின்றி பகிரங்கமாக பேசுவர்.
கேள்வி:– அமைச்சர்களுக்கு சுதந்திரம் இல்லையென குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அத்துடன் உங்கள் சகோ தரர்கள் தான் முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும் எதிரணி மேடைகளில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறதே?
பதில்:– அப்படியொன்றும் இல்லை. நான் அமைச்சர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம் வழங்கினேன். அதுதான் பிரச்சினை. முன்னாள் அமைச்சர் 37 மருந்து வகைகளுக்கு இறக்குமதிக்கான அனுமதியை வழங்கியுள்ளார். இந்த மருந்து வகைகளின் தரம் குறித்து ஆராய்ந்து தரச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த தரச் சான்றிதழை பெறுவதற்கு சுமார் ஒரு வருட காலம் சென்றிருக்கும். ஆனால், இந்த மருந்து வகைகளுக்கு உடனடியாக இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி:– அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்று ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுபவர் உட்பட ஏனைய அமைச்சர்கள் எம்.பிக்கள் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பின்னர் அரசில் இணைவதற்கு மீண்டும் வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?
பதில்:– அந்தத் துரோகிகளை ஒரு போதும் எனது அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள மாட்டேன்.
கேள்வி:– நாட்டின் பல பகுதிகளில் ஜனாதிபதிக்கான மாளிகைகள் பெருந்தொகை பணச் செலவில் நிர்மாணிக்கப்படுவதாக எதிரணியினர் குற்றஞ்சுமத்துகின்றனர். நாட்டின் இன்றுள்ள பொருளாதார நிலையில் இது தேவையற்றது என விமர்சனமும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கு பெருந்தொகை நிதி வரவு –- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படுகிறது எனவும் கூறப்படுகின்றது. இதன் உண்மைத் தன்மை என்ன?
பதில்:– நான் புதிதாக எந்தவொரு ஜனாதிபதி மாளிகையையும் நிர்மாணிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ எம்பிலிப்பிட்டிய, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் மஹியங்கனை போன்ற பகுதிகளில் ஏற்கனவே ஜனாதிபதிக்கான மாளிகைகளை நிர்மாணித்திருந்தார்.
நான் அவற்றை புதுப்பித்தேன். இவையனைத்தும் அரச சொத்துக்கள். இவற்றை அழிந்து போகவிடாமல் புனரமைப்பது எமது கடமை. (ஜனாதிபதியின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் போன்றவற்றை புனரமைக்கவும் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வேதனம் வழங்கவுமே பெருமளவு நிதி செலவிடப்படுகின்றது.)
சிலர் அன்னதானம் வழங்குவதற்காக இந்த நிதி செலவிடப்படுவதாக கூறலாம். ஆனால், அதில் உண்மை இல்லை. எமது வீடுகளுக்கு யாராவது வந்தால் அவர்களுக்கு உணவு வழங்குவது எமது பாரம்பரிய வழக்கமாகும். இதில் தவறொன்றுமில்லை என்றே நான் நினைக்கின்றேன்.
கேள்வி:– தான் 75 சதவீதமான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார். இது உண்மையா?
பதில்:– நாட்டு மக்கள் உண்மையை அறிவர்.
கேள்வி:– யுத்தத்தின் இறுதி கட்டத்தில் தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியதாக எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றாரே?
பதில்:– கனவில்....
கேள்வி:– சுதந்திரமான ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் முறையான நிர்வாகம் இடம்பெறவில்லை என குற்றஞ்சுமத்தப்படுகின்றதே?
பதில்:– நாட்டில் அப்படியொன்றும் இருந்ததில்லை. அதை யார் நியமித்தது. ஆணைக்குழுக்கள் எப்போதுமில்லாதவாறு இப்போது தான் சுதந்திரமாக இயங்கி வருகின்றன.
கேள்வி:– சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்தை விட்டு விலகி எதிரணிக்கு ஆதரவளிக்கின்றனர். இறுதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலகி எதிரணிக்கு ஆதரவளிக்கின்றது. ஏன் இந்த நிலை?
பதில்:– கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியான வலயம் வழங்க முடியாது. இவ்வாறு தமிழர்களுக்கொரு வலயம், முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கென தனித்தனியான வலயங்களை பிரித்து கொடுத்தால் நாடு துண்டாடப்பட்டுவிடும். எனவே நான் இதற்கு ஒருபோதும் அனுமதியேன். இந்தப் பிரச்சினையால் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு விலகி எதிரணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்.
கேள்வி:– அரசாங்க தொலைக்காட்சி சேவைகள் பக்கச்சார்பாக ஐ.ம.சு.முன்னணிக்கு மட்டும் பிரசாரம் மேற்கொள்வதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது. இது குறித்து நீங்கள் கவனம் செலுத்தவில்லையா?
பதில்:– நான் தொலைக்காட்சி பார்க்கவில்லை. தொலைக்காட்சி சேவைகள் பக்கச்சார்பின்றி சுதந்திரமாக இயங்க வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும். இது அரச தொலைக்காட்சிகளுக்கு மட்டுமின்றி, தனியார் தொலைக்காட்சிகளுக்கும் பொருந்தும்.
இப்போது இரண்டு மூன்று அரச தொலைக்காட்சிகளை தவிர்ந்த ஏனைய அனைத்தும் தனியார் தொலைக்காட்சி களே. அதில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் தொலைக்காட்சிகளும் இருக்கின்றன. நான் ஒரு வேட்பாளர் என்ற ரீதியில் தொலைக்காட்சி, வானொலி சேவைகளுக்கு நெறிமுறைகளை அமுல்படுத்த முடியாது.
கேள்வி:-- உங்களிடம் அமைச்சர்களின் கோப்புக்கள் இருப்பதாகவும் அவை குறித்து நீங்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு விடுக்கப்பட்டுள்ளது. ஏன் கோப்புகளை விசாரணை செய்யாமல் வைத்திருக்கின்றீர்கள்?
பதில்:– அடுத்தவர்களின் கோப்புகள் என்னிடம் இல்லை. சிலர் அமைச்சர்கள் குறித்து குற்றச்சாட்டுகளை எனக்கு அனுப்பி வைப்பார்கள். அவற்றை நான் கோப்புகளாக சேகரித்து வைத்துள்ளேன். அவ்வளவு தான்.
கேள்வி:– நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு டென்டர் கோரப்படுவதில்லை. இதனால் இத்திட்டங்களில் மோசடி இடம்பெறுவதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையிலேயே அதிவேக நெடுஞ்சாலைகள் போன்றவற்றுக்கு டென்டர் கோரப்படுவதில்லையா?
பதில்:– இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான டென்டர்கள் என்னிடம் வருவதில்லை. இருந்தும் 1996ம் ஆண்டளவில் ஒரு திட்டத்துக்கு மதிப்பீடு பெறப்பட்டு 2014ம் ஆண்டு அதை நடைமுறைப்படுத்தும் போது அதன் மதிப்பீடு பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. அத்துடன் இந்த அதிவேக நெடுஞ்சாலை திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சுவீகரிக்கப்படும் தனியார் காணிகளுக்கு அரச மதிப்பீட்டின்படி நஷ்டஈடு வழங்கப்படும்.
ஆனால் சில காணி உரிமையாளர்கள் அப்போதைய சந்தை நிலைவரப்படி தமது காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கும்படி கோரிக்கை விடுப்பர். அந்த நஷ்டஈட்டை வழங்கி அதிவேக நெடுஞ்சாலை திட்டங்களை முன்னெடுக்கும் போது அதற்கான செலவு அதிகரிக்கவே செய்யும். அக்காணிகளை பலாத்காரமாக எம்மால் சுவீகரிக்க முடியாது.
கேள்வி:– தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதால் வட மாகாணத்தில் உங்களது வாக்குகள் குறைய வாய்ப்புக்கள் உள்ளதா?
பதில்:-- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணிக்கு ஆதரவு வழங்குவது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. கடந்த தேர்தலில் வட மாகாணத்தில் எனக்கு 46,000 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. ஆனால், இம்முறை வாக்குகள் அதிகரிக்குமென நான் நினைக்கின்றேன்.
முதற் தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வட மாகாண சபைக்கு ஆர். அங்கஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் யாழ். மேயர் துரையப்பா வேறொரு கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார். தற்போது பலர் அங்கிருந்து என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். வடமாகாணத்தில் எமது கட்சிக்கு ஆதரவு பெருகிவருகின்றது என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.
கேள்வி:– மன்னார் ஆயர் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?
பதில்:– என்னிடம் கிடைக்காததை பொது வேட்பாளரிடம் பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது என்றே கருத வேண்டியுள்ளது.
கேள்வி:– இந்தியாவின் பிரபல நடிகர் சல்மான் கான் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டாரா?
பதில்:– அவர் எனது பிரசாரத்திற்காக இலங்கை வரவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக சுற்றுலா விசா பெற்று இங்கு வந்துள்ளார். அவர் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ முகாமொன்றையும் நடத்தினார். அதில் இலவச மூக்கு கண்ணாடி மற்றும் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
அரசாங்கம் சல்மான்கானுக்காக ஒரு சதமேனும் செலவிடவில்லை. 700மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக எதிரணியினர் குற்றஞ்சுமத்துகின்றனர். இதில் சிறிதளவும் உண்மையில்லை.
கேள்வி:– உள்ளூர் கலைஞர்கள் இப்போது உங்களுக்கு ஆதரவாக செயற்படவில்லையா?
பதில்:– அவர்கள் எப்போதும் என்னுடனேயே இருக்கின்றனர். "வன் சொட்" ரஞ்சன் போன்ற சிலர் மாத்திரமே எதிரணியில் இருக்கின்றனர்.
கேள்வி:–-- குருணாகலை, கும்புக்கெட்ட என்ற இடத்தில் வீதி நாடக கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏன்?
பதில்:– இந்த தாக்குதல் சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும்படி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
கேள்வி:–-- அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் குற்றச்செயல்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையே ஏன்?
பதில்:–- முறையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன் பிரதியமைச்சரொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதேபோல் அமைச்சர்களின் புதல்வர்களும் ஒரு தாக்குதல் சம்
பவத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததையும் இங்கு நினைவு கூரவேண்டும்.
ஐ.தே.கட்சி காலத்தில் ஆணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. சிலர் ஆளுங்கட்சியில் இருக்கும் போது கொலை சம்பவங்களில் ஈடுபடுவதுண்டு. ஆனால், எதிர ணிக்கு மாறியதுடன் புனிதர்களாக மாறி விடுகின்றனர்.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum