Top posting users this month
No user |
செத்த மாட்டிலிருந்து உண்ணி களர்வது போல் அரசாங்கத்தை விட்டு வெளியேறுகின்றனர்!- ஹக்கீம்
Page 1 of 1

சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும் அராஜக, சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்காக பொது வேட்பாளர் மைத்திரியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில், சம்மாந்துறை, சாய்ந்தமருது ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இழைத்த அநியாயங்களை ஓரளவாவது சீர்செய்வதற்காக அரச அமைச்சர்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதன் காரணமாகவும் எமது தீர்மானம் தாமதமாகியது.
தம்புள்ள பள்ளிவாசலுக்கு அதன் அண்மையிலேயே மாற்றுக்காணி தருகின்றோம் என்றார்கள். கிராண்ட்பாஸ் பள்ளிவாசலை தொழுகைக்காக திறந்துவிடவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்வந்தார். ஆனால் அதற்காக எமது முடிவை மேலும் தாமதப்படுத்த மக்கள் தயாராக இருக்கவில்லை. எனவே சமூகத்தினதும் கட்சியினதும் நன்மைக்காக நாங்கள் அரசாங்கத்தை விட்டு இறுதியில் வெளியேறினோம்.
ஆட்சி மாற்றம் வேண்ஹடும் என்ற கோசம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றது. சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும் அராஜக, சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்காக பொது வேட்பாளர் மைத்திரியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகின்றது
இவ்வாறான சூழ்நிலையில் எமது ஆவேசத்தையும், ஆத்திரத்தையும் அள்ளிக்கொட்டி தேவையற்ற விபரீதங்கள் ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தலைமைகள் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பட்டியல் போட்டு மக்கள் மத்தியில் கூறுகின்ற பொழுது அது இன்று பெரும்பான்மைச் சிங்கள் மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்தை நோக்கி நடைபெற்று வரும் அமைதிப் புரட்சிக்கு குந்தகமாக ஆகிவிடக்கூடாது. அதனால் ஆபத்துக்கள் ஏற்பட இடமளித்துவிடக்கூடாது.
இப்பொழுது செத்த மாட்டில் இருந்து உண்ணி களர்வதைப் போல அரசாங்கத்தை விட்டு அதன் உறுப்பினர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.
அரசாங்கத்தை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறினால் அதனால் ஏற்படும் விஜளைவு அரசாங்கத்துக்கு பாரதூரமான தாக்கங்களை உண்டுபண்ணும். முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருந்தாலும் கூட முஸ்லிம் வாக்குகள் தமக்குக் கிடைப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வம் என்பது ஜனாதிபதிக்கு மிகவும் துலாம்பரமாகத் தெரிந்த விடயமாகும்.
அந்த அச்சத்தின் காரணமாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் தொங்கிக் கொண்டிருந்தாலும் போதும் என்று ஜனாதிபதி எதிர்பார்த்தார். ஜனாதிபதிக்கு நாம் ஆதரவளிப்பது அவரைப் பற்றியும் அவரது சகோதரர்களைப் பற்றியும் இந்தநாட்டு முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் மனப்பதிவை இல்லாமல் செய்வதற்காவது குறைந்த பட்சம் உதவியிருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பழி தீர்க்க வேண்டும் என்பது எமது மக்களின் நோக்கமல்ல. இதுவரை தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இன்மேலும் தொடரக்கூடாது என்பதுவே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும் என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum