Top posting users this month
No user |
தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதறடிக்க பலவேறு திட்டங்கள் – முன்னாள் எம்.பி. அரியநேத்திரன்
Page 1 of 1

தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதறடிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் பல்வேறு அபாயங்கள் தோன்றியுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த சதியில் சிக்கியுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 2001ஆம் தொடக்கம் 2015வரை 15 ஆண்டுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளை அனைவரும் ஏற்று ஒருமித்த முடிவாகவே செயற்பட்டுவந்துள்ளோம்.
நான் 2004ஆம்ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் பல்வேறு விடயங்களை நாங்கள் விவாதித்தாலும் எடுக்கும் முடிவினை ஓரு முடிவாகவே எடுத்துள்ளோம்.
ஆனால் இந்த மைத்திரியின் நல்லாட்சிக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் எடுத்த முடிவினை அந்த கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி அதனை ஏற்றுக்கொள்ளாமல் சென்ற வரலாறு இந்த முறையே நடைபெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஒன்றுபட்டு ஒரு முடிவினை எடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதான தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதறடிப்பதற்கான ஆரம்பபுள்ளியாக பார்க்கப்படவேண்டியதாகவுள்ளது.
அத்துடன் வடமாகாண முதலமைச்சர் அவர்களை கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் தலைமையில் அணி திரளவேண்டும் என ஒருசாரார் கூறிக்கொண்டுள்ளனர்.இது தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் இதுவரையில் தான் கட்சியின் தலைமைபொறுப்பொன்றை கையேற்க தயார் இல்லையென்று கூறவில்லை.பல்வேறுபட்ட கருத்துகளை கூறிவரும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தொடர்பில் கருத்து எதனையும் தெரிவிக்காதது இன்னொரு வகையில் பாரிய சந்கேத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசம் ஊடாக இலங்கை அரசாங்கம் ஊடாக எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்குள் அரசியலமைப்பினை மாற்றி வடகிழக்கு இணைந்த அரசியல் தீர்வினை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதறடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுதாகவே நோக்கப்படுகின்றது.
இதற்காக அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களும் துணைபோகின்றார்களா அந்த வலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிக்கிவிட்டதா என்ற கேள்விகள் இன்று எழுந்துள்ளன.
இந்தவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவாக இருக்கலாம் அல்லது ஒன்றிணைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கலாம் எடுக்கும் முடிவுகளை ஒருமுடிவாக காட்டவேண்டிய தேவையுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன் ஐயாவுக்கும் விக்னேஸ்வரன் ஐயாவுக்கும் இடையில் உள்ள பிரச்சினையை நாங்களே பேசி தீர்க்கவேண்டும்.அதற்கான சம்பிக்ஞையை விக்னேஸ்வரன் ஐயாவும் விடுத்துள்ளார்;
அதனை காலம் தாழ்த்தாது மேற்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையினை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையினை அனைவரும் மேற்கொள்ளவேண்டும்.
அதனைச்செய்ய தவறுவோமானால் கடந்த கால தவறுகளை கூறிக்கொண்டு எமது மக்கள் தொடர்ந்து அடிமையான நிலையில் இருக்கவேண்டிய நிலையே ஏற்படும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum