Top posting users this month
No user |
Similar topics
லிந்துலையில் பஸ் விபத்து... 40 பேர் காயம்...! ஒருவர் பலி
Page 1 of 1

நுவரெலியா - லிந்துலை பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 9.25 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை தேசிய ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தேயிலை தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை சந்தியிலிருந்து டி.ஆர்.ஐ தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் மட்டுக்கலை சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற பாரிய பஸ் விபத்தில் 40 பயணிகள் பலத்த காயங்களுக்கும், சிறு காயங்களுக்கும் உட்பட்ட நிலையில் லிந்துலை ஆதார வைத்தியசாலை மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கென சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ் சுமார் 50 அடி பள்ளத்திற்கு பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டி.ஆர்.ஐ தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் சேவையாளர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் லிந்துலை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவிக்கின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லிந்துலையில் வாகன விபத்து: 23 பேர் காயம்
» கல்முனை மாநகர சபையின் வாகனம் விபத்து! ஆறு பேர் காயம்
» கொழும்பு - கண்டி பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி! 4 பேர் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum