Top posting users this month
No user |
Similar topics
வட, கிழக்கில் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணையை தேவை - பொலிஸ் மாஅதிபருக்கு மகஜர் கையளிப்பு
Page 1 of 1

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸ் மாஅதிபருக்கு, ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு மகஜரொன்றை கையளித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர ஊடாக இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். ஊடக அமையப் பிரதிநிதிகள், கிழக்கு ஊடக அமைப்பு மற்றும் இலங்கை ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழுவின் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று இன்றைய தினம் கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது.
கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற 30 பக்கங்களை கொண்ட ஆவணமொன்றையும் பொலிஸாரிடம் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு கையளித்துள்ளது.
அத்துடன. இணைய ஊடக நிறுவனம் ஒன்றின் யாழ் அலுவலகத்திற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், விசாரணைகளை நடாத்தி அச்சுறுத்தியமையானது, ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்பும் பாதுகாப்பு பிரிவினரின் மனோ நிலை மாறவில்லை என்பதனை எடுத்து காட்டுவதாகவும் அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடாத்த குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், இணைய நிர்வாகத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யுமாறும், பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி ஊடாக விசாரணை முன்னேற்றங்களை கண்டறிந்து தமக்கு அறிவிக்குமாறும் யாழ் ஊடக அமையப் பிரதிநிதிகளிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முல்லைத்தீவில் காடழிப்பு தொடர்பில் பார்வையிடச் சென்ற கூட்டமைப்பினருக்கு அச்சுறுத்தல்
» போர்ட் சிட்டி தொடர்பில் சுற்றாடல் அறிக்கை தேவை! உச்சநீதிமன்றம் கண்டிப்பு
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum