Top posting users this month
No user |
Similar topics
வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் குற்றச்சாட்டு
Page 1 of 1

வடமாகாண மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கதைக்கவில்லை என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கதின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு மையத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த நல்லாட்சி அரசை உருவாக்குவதற்கு சிவில் அமைப்புக்கள் என்ற வகையிலும் மீனவ அமைப்புக்கள் என்ற வகையிலும் எமது அமைப்பும் உழைத்திருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்த நல்லாட்சி இன்று நாசகார ஆட்சியாக மாறிக் கொண்டிருக்கின்றது. மீனவர் தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் கூட நல்ல விடயங்களை எதிர்பார்த்தளவு காணமுடியவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பாக 10 விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றினை வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்திருந்தோம்.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கதைத்து தீர்க்கமான முடிவினை எடுக்கும் படியும் கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் அங்கு கதைத்தாக தெரியவில்லை. அவர்களும் நழுவல் போக்குகளைக் கூறி தமது கதிரைகளை தக்க வைக்கவே பார்க்கிறார்கள். தொடர்ச்சியாக நாங்கள் பார்கிறோம் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் ஒட்டுமொத்த வாக்குகளையும் தமது பிரச்சனைக்களுக்கு தீர்வு வரும் என கருதி இவர்களுக்கு வழங்கியிருந்தார்கள். இவர்கள் இப்படியே நடந்தால் எதிர்காலத்தில் இவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
நல்லாட்சியை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்த நாங்கள் அதனை கண்காணிக்கவும் மக்கள் எழிச்சியை ஏற்படுத்தவும் முடியும். மீனவர்கள் பலரின் காணிகள் 1985, 1990 முதல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றை உடனடியாக விடுதலை செய்து மீனவர்களின் வாழ்வுக்கு வழியேற்படுத்தப்பட வேண்டும். தற்போதும் இராணுவத்தின் கெடுபிடிகள் சில பிரதேசங்களில் காணப்படுகின்றது. இதனால் சேந்தான்குளம், பருத்தித்துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நல்லிணக்கம் என கூறும் அரசாங்கம் தென்னிலங்ககையில் உள்ள இனவாத சக்திகளுக்கு அதனை தெளிவுபடுத்த தயாராகவில்லை. அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நடந்து கொள்ளும் கடும்போக்கு தனம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவில்லை.
இது தவிர இந்திய மீனவர் பிரச்சனை, மீன் வர்த்தகம், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறை தொடர்பில் பல பிரச்சனைகளை இன்றும் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்குகிறார்கள். இவற்றுக்கு எல்லாம் காரணம் இலங்கையில் மீன்பிடி தொடர்பான ஒரு தேசிய கொள்கை இல்லை. 2016 ஆம் ஆண்டு மீன்பிடி தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றோம் எனத் தெரிவித்தார்.
இவ் ஊடகசந்தில் வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் மாவட்ட ரீதியிலான பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வட்டரக்க தேரர் மீது மீண்டும் தாக்குதல்! பொதுபல சேனா மீது குற்றச்சாட்டு
» 94 பாராளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெறவில்லை
» டுபாயில் பெருந்தொகை பணத்தை பதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum