Top posting users this month
No user |
ஹரியானாவில் அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் காவல்துறை அதிகாரி
Page 1 of 1

அண்மையில் ஹரியானாவில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டம் ஒன்றில் அதிகாரிகளோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.சங்கீதா கலியா IPS கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அனில் விஜ்ஜூம் கலந்து கொண்டார்.
இதன்போது "கள்ளச்சாராயம் நம் மாவட்டத்தில் பெருமளவு பெருகிவிட்டது. இதைத்தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு உங்கள் மாவட்ட SP உங்களுக்கு விளக்குவார் என்று கூறி அமைச்சர் நழுவிவிட்டார்.
உடனே SP திருமதி கலியா "ஆமாம் சாராயக் குற்றம் பெருகியது உண்மைதான். ஆனால் நம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,500 வழக்குகள் Excise Act ன்படி(இது ஒரு சாதனை மற்றும் மிகப்பெரிய மைல்க்கள்) பதிவுசெய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்" என்று மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் அமைச்சரின் முன்பே அந்த நபரின் கேள்விக்கு பதிலளித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர், "நீ இந்தக் கூட்டத்தைவிட்டு முதலில் வெளியேறு. இல்லையென்றால் நான் வெளியேறுகிறேன்" என்று SPயை பார்த்து சுகாதாரத்துறை அமைச்சர் பேசினார்.
உடனே திருமதி.சங்கீதா கலியா IPS "நான் தவறு ஏதும் செய்யவில்லை. தவறான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மக்களை காக்கும் பணி செய்யும் நான், உண்மையை வெளிப்படையாக மக்களுக்கு கூறியுள்ளேன். நான் ஏன் வெளியேற வேண்டும்.? வேண்டுமென்றால் தவறுசெய்தவர்கள் வெளியேறட்டும்" என்று தைரியமாக கூறினார்.
இப்படியொரு கண்டிப்பான காவல்அதிகாரியை, சினிமாவில் மட்டுமே பார்த்த அமைச்சர், கூட்டத்தைவிட்டு அசிங்கப்பட்டு வெளியேறினார். கூட்டத்தை வெற்றிகரமாகவும் வெளிப்படையாகவும் SP.கலியா நடத்தி முடித்தார்.
எனினும் 24 மணித்தியாலத்திற்குள் குறித்த பெண் காவல்துறை அதிகாரி எந்தவிதமான விசாரணைகளும் இன்றி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum