Top posting users this month
No user |
Similar topics
வண்டலுார் உயிரியல் பூங்காவில் பாரிய வெள்ளம்! விலங்குள் நகருக்குள் வரும் அபாயம்
Page 1 of 1

சென்னை வண்டலுாரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நேற்று மழை வெள்ளத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல இடங்களில் சுற்றுச்சுவர் உடைந்தது வீழ்ந்துள்ளன.
இதனையடுத்து பூங்காவில் உள்ள வன விலங்குகள் தப்பிச் செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலுார் பூங்காவில் 1,900 ஏக்கர் பரப்பில் 85 அமைப்பிடங்களில் 2,080 விலங்குகள் உள்ளன. புலி, சிங்கம், சிறுத்தை, கரடி, கழுதைப்புலி, யானை உள்ளிட்ட 34 வகையான பாலுாட்டிகள்; ராஜநாகம், நாகம், முதலை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஊர்வன வகை விலங்குகள் 20க்கும் மேற்பட்ட பறவை வகைகள் உள்ளன.
கடந்த மாத இறுதியில் கேளம்பாக்கம் சாலையில் இந்த பூங்காவின் சுற்றுச்சுவர் திடீரென உடைந்து விழுந்தது. பூங்கா நிர்வாகத்தினர், அவசர கதியில் சுற்றுச்சுவர் உடைப்பை சரி செய்தனர். எனினும் நேற்று பெய்த அடை மழையால் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல், வண்டலுார் - -கேளம்பாக்கம் சாலையில் எட்டு இடங்களில் பலத்த சத்தத்துடன் பூங்காவின் சுற்றுச்சுவர் உடைந்து விழுந்தது. அதே வேகத்தில் பூங்காவுக்குள் வெள்ள நீர் காட்டாற்று வெள்ளம் போல் வேகமாக நுழைந்தது; சில நிமிடங்களுக்குள் பூங்கா மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், வனத்துறை அமைச்சர் ஆனந்தன், வனத்துறை முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மெல்கானிக்கு தகவல் கொடுத்தனர்.
தமிழக உயிரியல் பூங்கா ஆணையத்தின் தலைவரான முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை உடனடியாக பார்வையிட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த உயர் அதிகாரிகள், நள்ளிரவு வரை அங்கு தங்கி ரோந்து பணியில் ஈடுபட்டனர்; சுற்றுச்சுவர் உடைப்பை சரி செய்யும் பணியை விரைவுபடுத்தியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ்ப் பூங்காவில் வண்ணமலர்கள்
» சுகாதார அமைச்சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.
» சுராவின் உயிரியல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum