Top posting users this month
No user |
Similar topics
வெள்ளத்தில் மூழ்கும் சென்னை நகரம்! மீட்பு பணியில் இராணுவத்தினர் தீவிரம்! நான்கு நாட்களுக்கு தொடரும் என எச்சரிக்கை
Page 1 of 1

சென்னை எங்கும் வரலாறு காணாத வெள்ளத்தினால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது..
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதுடன், தேவையான அவசர உதவிகளை இந்திய இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வைத்தியசாலைகள் அனைத்தும் நீரினால் மூழ்கப்பட்டுள்ளமையால், பாதிக்கப்பட்ட மக்கள் வைத்திய தேவைகளுக்காக தடுமாறி வருகின்றனர்.
பெய்துவரும் அடைமழையால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ரயில், பஸ் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 ரயில்களும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் 3 ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 11 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடருமென வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரு நாட்களாக மழை தொடர்ந்து பெய்துவருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் அடைமழையால் குறித்த 5 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகள் நிரம்பியதால் அவற்றில் இருந்து பெருமளவு நீர் வெளியேற்றப்படுகிறது. அத்துடன் மழை நீரும் ஆற்று நீருடன் சேர்ந்ததால் வீதிகள் அனைத்தும் ஆறுகளாக மாறியுள்ளன. இதனால், அனைத்து வீதிகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து சென்னை வரும் வாகனங்கள் செங்கல் பட்டிலேயே நிறுத்தப்பட்டன.
மேலும் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் ரயில் போக்குவரத்தும் தடைபட்டது. சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் முத்துநகர், ராமேசுவரம், மலைக்கோட்டை, உழவன், மன்னை, திருச்செந்தூர் உள்ளிட்ட 11 எக்ஸ்பிரஸ் ரயில்களும், எழும்பூர் மங்களூர் எக்ஸ்பிரஸ், ஹவுரா, புதுடெல்லி, விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இன்றும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புறநகர் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் தலைமையிலான குழுக்களை அமைத்து, வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இரு நாட்கள் பெய்த அடைமழையிலேயே வட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, பெய்துவரும் அடைமழையால் ஓடுதளத்தில் மழைவெள்ளம் தேங்கியிருப்பதால் சென்னை விமான நிலையம் நாளை வியாழக்கிழமை காலை வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் 4000 பயணிகள் முடங்கியுள்ளதுடன் உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்கள் நிலை தடுமாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீரில் மூழ்கும் வடமாகாணம்! மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
» சனல்-4 போர்க்குற்ற காணொளி! அதில் தோன்றிய இராணுவத்தினர் யார்? தொடரும் விசாரணை
» கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை: மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum