Top posting users this month
No user |
பூண்டு குழம்பு
Page 1 of 1
பூண்டு குழம்பு
தேவையான பொருள்கள் : –
பூண்டு – 1கப்
சின்ன வெங்காயம் – 1/2கப்
தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது
புளித் தண்ணீர் – 1/2கப்
தேங்காய் துருவல் – 1/2கப்
சீரகம் – 1ஸ்பூன்
சோம்பு – 2ஸ்பூன்
மிளகு – 1ஸ்பூன்
வெந்தயம் – 1ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4ஸ்பூன்
மிளகாய் தூள் – 2ஸ்பூன்
தனியா தூள் – 3ஸ்பூன்
மஞ்சள் துள் – 1/4ஸ்பூன்
கடுகு, உளுந்தப்பருப்பு – 1ஸ்பூன்
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி தழை – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
பூண்டையும் வெங்காயத்தையும் தோல் உரித்து நன்கு கழுவி தனியே வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவல், சீரகம், சோம்பு, மிளகு, 2பூண்டு பல் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மைப்போல் அரைக்கவும். பின்பு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உரித்த பூண்டையும் வெங்காயத்தையும் சேர்த்து பொன் நிறமாக வதக்கி தனியே எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அதே வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கி கொள்ளவும்.
நன்கு வதக்கிய பின்பு வறுத்த பூண்டையும், வெங்காயத்தையும் அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கி புளித்தண்ணீர், அரைத்த மசாலா, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தவுடன் அதை கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழைகளை தூவவும். தேவையான பொழுது லேசாக சுட வைத்து பரிமாறவும்.
சுவையான பூண்டு குழம்பு தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum