Top posting users this month
No user |
Similar topics
எலுமிச்சை சாதம்
Page 1 of 1
எலுமிச்சை சாதம்
தேவையான பொருள்கள்:-
வெந்த சாதம் – 1 1/2 கப்
எலுமிச்சை பழம் – 1நம்பர்
வெந்தயம் – 1ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 3 நம்பர்
வறுத்த நிலக்கடலை – 1/4கப்
கருவேப்பிலை – 1கொத்து
கடுகு, உளுந்தப்பருப்பு – 1ஸ்பூன்
புளித்தண்ணீர் – 1/4கப்
மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிழியும் போது விதை இருந்தால் அதை எடுத்து கீழே போடவும்.
பின்பு வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும் கருவேப்பிலை, சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், வறுத்த நிலக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.
நன்கு வறுத்த பின்னர் எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு 3நிமிடம் கொதிக்கவிடவும்.
நன்கு சிறிது வற்றிய பின்னர் வெந்த சாதத்தை சேர்த்து நன்கு கலக்கி கீழே இறக்கி வைத்துக் கொள்ளவும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.
சுவையான எலுமிச்சை சாதம் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum