Top posting users this month
No user |
கொத்தமல்லி இட்லி உப்புமா
Page 1 of 1
கொத்தமல்லி இட்லி உப்புமா
தேவையான பொருள்கள்:
இட்லி – 6
கொத்தமல்லி இலை – 1கட்டு
தேங்காய் – சிறிதளவு
பச்சைமிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – சிறிதளவு
உளுந்தம் பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லியை உதிரிஉதிரியாக பிட்டு வைத்துக்கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை போடவும்.
கடுகு நன்கு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியவுடன் தனியே எடுத்து ஆற வைத்து அதனுடன் புளி, உப்பு, தேங்காய், பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை நன்கு வறுத்துக்கொள்ளவும்.
அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்.
நன்கு கெட்டியானதுடன் உதிரித்த இட்லியை சேர்த்து நன்கு கிளறவும்.
கிளறியவுடன் கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி இலைகளை தூவவும்.
சுவையான கொத்தமல்லி இட்லி உப்புமா தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum