Top posting users this month
No user |
கிச்சன் டிப்ஸ் – 9
Page 1 of 1
கிச்சன் டிப்ஸ் – 9
*வெங்காய பக் கோடா போரடித்து விட்டதா? வெண்டைக் காயை நீளமாக வெட்டி இத்துடன் சிறிது கடலை மாவு மற்றும் உப்பு கலந்து செய்தால், வெண்டைக் காய் பக்கோடா ரெடி.
*பஜ்ஜி மாவுடன், சீரகத்தூள் சேர்த்து செய்தால், சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.
* வெண்டைக்காய் வதக்கும் போது, ஒரு ஸ்பூன் மோர் ஊற்றி வதக்கினால், வழவழப்பின்றி சுவையாக இருக்கும்.
* பொங்கல் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்து கலந்துவிட்டால், கெட்டியாகி விடும்.
* சிப்ஸ் செய்யும் போது, உருளைக்கிழங்கை சீவி அதை கடலைமாவு கலந்த தண்ணீரில் நனைத்து உலர வைத்து, பின் பொரித்தால், நன்றாக இருக்கும்.
* வடகத்திற்கு கூழ் காய்ச்சும் போது, சிறிது பால் சேர்த்து காய்ச்சினால், பொரித்தபின் வடகம் வெண்மையாக இருக்கும்.
* பலகாரங்களுக்கு பாகு காய்ச்சும் போது, பதம் வந்ததும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால், பாகு முறியாது.
* எலுமிச்சம் பழம் காய்ந்து விட்டதா, பிழிந்தால் சாறு வரவில்லையா? கவலையை விடுங்கள்… எலுமிச்சம் பழத்தை சூடான வெந்நீரில் சில நிமிடம் போட்டு வைத்திருந்து, பின் பிழிந்தால் சாறு நன்கு வரும்.
* புளித்த தோசை மாவில் சிறிது சர்க்கரை கலந்து தோசை வார்த்தால், புளிப்பு சுவை குறைவாக இருக்கும்.
* பலாப்பழத்தை ஒரு பிளாஸ்டிக் கவரினுள் வைத்து, ப்ரிஜ்ஜில் சில நிமிடங்கள் வைத்திருந்த பின் நறுக்கினால், பால் போன்ற பிசின் கையில் ஒட்டாது.
* தேங்காய் பர்பி செய்யும் போது, சிறிது கடலைமாவு சேர்த்து செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும்.
* பிரியாணி செய்யும் போது தேங்காய் பாலுக்கு பதிலாக, கட்டித் தயிர் விட்டு செய்தால், பிரியாணி உதிரியாக இருக்கும்.
* தேங்காய் சாதம் செய்யும் போது அத்துடன், சிறிதளவு வறுத்தரைத்த வெந்தயப் பொடி கலந்தால், சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
* வெண்ணெயில் இருந்து நெய் உருக்கும் போது, முருங்கை இலை கிடைக்காவிட்டால், சிறிது வெந்தயம் போட்டு இறக்கினால் வாசனை பிரமாதமாக இருக்கும்.
*முட்டை வேக வைக்கும் போது, உப்பு போட்டு வேக வைத்தால், மேல் தோல் எளிதில் உரிக்க வரும்.
*குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், சிறிது அரிசியை வறுத்து நைசாக அரைத்து குழம்பில் கலந்து விட் டால், அதிகப்படியான உப்பு குறைந்துவிடும்.
*கோதுமை மாவில் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், நீண்ட நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். அதேபோல், ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் ரவை என்ற வீதத்தில் சேர்த்து செய்தால், பூரி நன்கு உப்பலாக வரும்.
*வழக்கமாக தயார் செய்யும் சப்பாத்தி மாவுடன், துருவி வேக வைத்து மசித்த காரட் மற்றும் சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவை நன்றாக இருக்கும். இது சத்து நிறைந்த உணவும் கூட.
*வெந்நீரில் சிறிது டால்டா கலந்து, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால், மிகவும் சாப்ட்டாக இருக்கும்.
* மைக்ரோ ஓவனில் மறு சூடு செய்யும் போது, சாதம், பொரியல் போன்றவற்றின் மீது தண்ணீரை தெளித்து பின்னர் சூடு செய்தால், அவை வறண்டு போகாமல் இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum