Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பழிவாங்கும் ராஜபக்சவை தோற்கடிப்பதே எமது நோக்கம்! சந்திரிகா

Go down

பழிவாங்கும் ராஜபக்சவை தோற்கடிப்பதே எமது நோக்கம்! சந்திரிகா Empty பழிவாங்கும் ராஜபக்சவை தோற்கடிப்பதே எமது நோக்கம்! சந்திரிகா

Post by oviya Fri Jan 02, 2015 1:52 pm

பழிவாங்கும் அரசியல் எம்மிடமில்லை. ராஜபக்ச குடும்பத்தினரே வைராக்கிய அரசியலை முன்னெடுப்பதாகவும், நாட்டு மக்களை பழிவாங்கும் ராஜபக்சவிடமிருந்து நாட்டை பாதுகாக்கவே தாம் முனைவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட எம்.பி.யும் பிரதி அமைச்சருமான நந்திமித்திர ஏக்கநாயக்க எதிரணியுடன் இணைந்து கொள்ளும் ஊடகவியலாளர் மாநாடு அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

பழிவாங்கல் அரசியல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச பிரசார கூட்டங்களில் எம்மீது பழி போடுகிறார். பழிவாங்கல் அரசியல் தொடர்பில் நான் அவ்வரசிற்கு கூற வேண்டிய தேவைப்பாடும் கிடையாது.

எம்மிடம் ஒரு போதும் அரசியல் பழிவாங்கல் இருந்ததில்லை. நாம் அவ்வாறு செயற்பட போவதுமில்லை. எனது ஆட்சி காலத்தில் கட்சி சார்ந்த அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய நான் ஒரு போதும் அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு அரசியலை நாம் செய்ய கற்றுக்கொள்ளவில்லை.

எனினும் ஜனாதிபதி கதிரைக்கு மஹிந்த ராஜபக்சவை அமர வைத்தது நானே. எனினும் சுமார் 9 வருடம் எனக்கு செய்யாத அநியாயம் இல்லை. 7 வருடம் என்னை நாட்டிற்கு வர இடமளிக்கவில்லை.

இவ்வாறு என்னை பழிவாங்கியது ராஜபக்சவினரே. எனவே பழிவாங்கல் அரசியல் ராஜபக்ச குடும்பத்தினரிடமே உள்ளது.

இந்நிலையில் நாட்டு மக்களை பழிவாங்கும் ராஜபக்சவை தோற்கடிப்பதே எமது நோக்கம் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum