Top posting users this month
No user |
ஏமாற்றும் அரசியலில் தொடர்ந்தும் இருக்க முடியாது: எதிரணியில் இணைந்த அச்சல ஜாகொட
Page 1 of 1

ஏமாற்றும் அரசியலில் இருந்து கொண்டு தொடர்ந்தும் செயற்பட முடியாது என்ற காரணத்தினால் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்தாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல சுரங்க ஜாகொட தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றி்ல் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரை வென்ற உரிமையை தனிநபர் தன்வசப்படுத்தி வருகிறார். இந்த வெற்றியின் உரிமையானது பயங்கரவாதத்தை தோற்கடிக்க அர்ப்பணிப்புகளை செய்த முழு நாட்டு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உரிமையாகும்.
அத்துடன் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த படையினரின் பெற்றோருக்கு இந்த உரிமை கௌவரம் வழங்கப்பட வேண்டும்.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்ஷ மீது பெரிய எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருந்தனர்.
போர் முடிந்து விட்டது நாடு கட்டியெழுப்படும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் கொண்டிருந்தனர். எனினும் அவர் அபிவிருத்திக்குள் செல்லவில்லை. பெருமளவில் பணத்தை அறவிடக் கூடிய திட்டங்களை மாத்திரம் அவர் மேற்கொண்டார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதிலாக தனது குடும்பத்தை மாத்திரம் மகிந்த கட்டியெழுப்பினார். இதனால், மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு வரும் வகையில் அரசியலமைப்பில் மாற்றங்களை செய்து பதவிக்காலம் முடியும் முன்னர் தேர்தலை அறிவித்தார்.
மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியினர் சர்வதேச சதித்திட்டத்தை மேற்கொள்வதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகிறது. ஆனால், மகிந்த ராஜபக்ஷவுக்கு பின்னால் இருந்து ஆலோசனைகளை வழங்கி வரும் நபர்களே சர்வதேச சதித்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அச்சல சுரங்க ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum