Top posting users this month
No user |
மதம் மாற்றுவதை நிறுத்தக்கோரி பாப்பரசருக்கு மகஜர்
Page 1 of 1

நிர்ப்பந்த அடிப்படையில் மதம் மாற்றுவதை நிறுத்தக்கோரி, இலங்கைக்கு வருகை தரும் பாப்பரசர் பிரன்ஸிசிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்காக கையெழுத்து திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சைவத்தமிழ் இந்து சிவில் சமூகம் தெரிவித்தது.
திருவெம்பாவை காலத்தில் வடக்கு, கிழக்கின் பல இந்து ஆலயங்களிலும் இந்து அமைப்புக்களின் காரியாலயங்களிலும், கிராம ரீதியாகவும் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
இவ்வாறு பாப்பரசரிடம் கையளிக்கப்படவுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் பன்னெடுங்காலமாக பூர்வீகமாக தமக்கே உரித்தான சுதேச கலாச்சார பண்பாட்டு விழுமியங்களுடன் சைவத்தமிழ் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இந்த நாட்டில் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஏனைய மதப் பிரிவுகளுடன் மத நல்லிணக்கத்தை பேணிவருவதோடு, தமது சுதேசப்பண்பாட்டை ஆழமாக பின்பற்றியும் வருகின்றனர்.
இந்நிலையில் குறிப்பாக இலங்கையின் வடக்கு - கிழக்கில் கடந்த மூன்று தசாப்த யுத்தத்தாலும் அதன் பின்னரான விளைவுகளாலும் சுதேசிகள் மிகப்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அவல நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு வெளி உதவிகளில் தங்கிவாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்களில் பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இவர்களுக்கு பல சமய, சமூக அமைப்புக்கள் பல்வேறு வழிகளில் கைகொடுத்து வருகின்றன. இருந்த போதிலும் கணிசமான கிறிஸ்தவ போதகர்களும், அமைப்புக்களும் கல்வி, மருத்துவ, பொருளாதார உதவிகளை மதமாற்றத்துக்குரிய ஆயுதமாக பயன்படுத்தி வருவது கவலைதரும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த துன்பமயமான காலப்பகுதியில் யுத்தம், வறுமை, இயலாமை ஆகிய காரணிகளை பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான சைவத்தமிழ் இந்துக்கள் மதம் மாறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அதுமட்டுமன்றி அவர்களில் ஒருதொகுதியினர் மீளவும் தம் தாய் மதம் திரும்புவதை உதவிகளைக்காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றிய சமய ஞானியான திருமூலரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட இலங்கையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன.
வடக்கு - கிழக்கில் பெரும்பாலான கிராமங்கள் இன்றுவரை நூறு சதவீதத்தை அண்மித்த வகையில் சைவத்தமிழ் இந்துக்களை கொண்டதாக இருக்கின்றது.
இருந்த போதிலும் இந்துக்களுடைய மதவிழுமியங்களுக்கு மதிப்பளிக்காத வகையில் கிறிஸ்தவர்களே இல்லாத கிராமங்களில் தேவாலயங்களையும், முக்கிய வீதிகள், சந்திகளில் கிறிஸ்தவ மதசின்னங்களை நிறுவி வருவதும் சுவிஷேசக் கூட்டங்களை பெருமெடுப்பில் நடத்தி வருவதும் சுதேச இந்துக்களின் மனங்களை தொடர்ச்சியாக புண்படுத்தும் மற்றும் மேலாண்மையை திணிக்கும் செயற்பாடுகளாகும்.
உலக கிறிஸ்தவ ஆன்மீகத் தலைவர் என்ற ரீதியில் மேலைத்தேயத்தில் முஸ்லிம் மக்களை மதம் மாற்றாது கிறிஸ்தவ - முஸ்லிம் ஒற்றுமைக்கு தாங்கள் பாடுபடுவது போன்று, இங்கும் சுதேசிகளான சைவத்தமிழ் இந்துகளின் ஆதங்கங்களை புரிந்துகொண்டு, தங்கள் திருச்சபைகளுக்கும் ஏனைய கிறிஸ்தவ அமைப்புக்களுக்கும் பொருளாதார உதவிகளை மதம் மாற்றுவதற்கான ஓர் நிர்ப்பந்தமாக பயன்படுத்த வேண்டாம் என்பதையும், மதநல்லிணக்கத்துக்கு இடையூறுவிளைவிக்கும் வகையில் தேவையற்ற இடங்களில் மதச்சின்னங்களை நிறுவவேண்டாம் எனவும் அறிவுறுத்துமாறு சகோதரத்துவத்துடனும் ஆன்மீக உணர்வுடன் தங்களை வேண்டுகின்றோம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum