Top posting users this month
No user |
ராஜபக்ச ஆட்சியிலிருக்கும் போதே 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்!– ராஜித
Page 1 of 1

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் போதே 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக பொது வேட்பாளரின் இணைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கமொன்றில் அங்கம் வகித்து அந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் போதே இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னதாக இவ்வளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டதில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு ஆளும் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
1956ம் ஆண்டு முதல் அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ தோற்கடிப்பதற்காக ஆளும் கட்சியிலிருந்து ஒரு தொகுதியினர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் கவிழ்ந்துள்ளது.
2001ம் ஆண்டில் ஆளும் கட்சியை தோற்கடிக்கும் நோக்கில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டிருந்தார்கள்.
இவ்வாறு ஆளும் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டதனைத் தொடர்ந்து சந்திரிக்கா பண்டாரநயாக்கவின் அரசாங்கம் கவிழ்ந்தது.
எனினும், தற்போது பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் கரத்தைப் பலப்படுத்த 25 ஆளும் கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
இன்று (31) மட்டும் ஆளும் கட்சியின் 20 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர் என டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum