Top posting users this month
No user |
Similar topics
வவுனியா விவசாய கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் நினைவு நாள் இன்று
Page 1 of 1

வவுனியா விவசாயக் கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 9 வது வருட நினைவு தின அஞ்சலி இன்று நடைபெற்றது.
கடந்த 18-11-2006 ஆம் ஆண்டு யுத்தகாலத்தில் வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 9வது ஆண்டு நிறைவு நினைவு தினம் வவுனியா விவசாயக் கல்லூரியில் அதிபர் திருமதி குமுதினி சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களின் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், கல்லூரியின் அதிபர் திருமதி குமுதினி சந்திரகாந்தன் அவர்களால் நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட சங்கரலிங்கம் கிந்துஜன், 2சித்திரவேல் கோபிநாத், இராமச்சந்திரன் அச்சுதன், சித்திக்காசன் றிஸ்வான், திருநாமம் சிந்துஜன் ஆகியோரின் படங்களுக்கு விவசாய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக இரத்ததான நிகழ்வு ஒன்று விவசாயக்கல்லூரி மாணவர்களால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் திருமதி செந்தில் குமரன், மனிதவள உத்தியோகத்தர் திருமதி சிவகுமாரன், விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
» சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் - இன்று கரும்புலிகள் நாள்!
» மட்டு.கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தினம் 28ஆம் திகதி அனுஸ்டிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum