Top posting users this month
No user |
Similar topics
ராடாவின் மோசடியை விசாரணை செய்த அதிகாரி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பிரசன்னம்
Page 1 of 1

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 169 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பான தகவல்களை திரட்டிய கணக்காய்வு திணைக்கள அதிகாரியான எச்.எம்.கே.ஹேரத் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜரானார்
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆவணமொன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்வதற்காக தாம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த அரசாங்கத்தினால் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான சாலிய விக்ரமசூரிய கடந்த மே மாதம் 12ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் கடந்த மே மாதம் 12ஆம் திகதி பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்துகொண்டனர்.
சுனாமி பேரழிவினால் வீடுகளை இழந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக ராடா நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் நிதி, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி அமைப்பின் புலனாய்வு பிரிவினர் தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பசிலின் செயலாளரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை
» கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
» மஹிந்த அரசின் மற்றுமொரு மோசடி! நிதி குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum