Top posting users this month
No user |
பிரான்ஸ் தாக்குதலின் எதிரொலி அரசியல் தஞ்சம் கோருவோரை தாக்குமா...?
Page 1 of 1

கடந்த வெள்ளியன்று பிரான்சின் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகளால் நடாத்தப்பட்ட தாக்குதல் பிரான்சில் மட்டுமல்லாது உலக ஒழுங்கிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
மிகவும் போற்றத்தக்கதாக இருந்த பிரான்சின் சமூகக்கட்டமைப்பு இந்த தாக்குதலால் கேள்விக்குள்ளாகப் போகின்றதா என்ற அச்சமும் எழுந்துள்ளது தவிர்க்க முடியாது.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தாரக மந்திரத்துடனான பிரான்சின் அரசியல் சாசனம் அந்நாட்டின் குடிமக்களுக்கு அதிகப்படியான வரப்பிரசாதங்களை வழங்கியிருந்தது.
ஆனால் கருப்பு வெள்ளி தாக்குதலின் பின் பிரான்சின் அரசியல், சமூக,பொருளாதார புவியியல் மட்டங்களில் மாற்றங்களை ஏற்பட்டுவதற்கான முஸ்தீபுகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது தெரிகிறது.
அதன் முதற்படியாக அமைந்தது தான் திங்கட்கிழமை பிரான்சின் அதிபர் அதியுயர் சபையில் ஆற்றிய உரை.
பிரான்சின் வரலாற்றில் அரிதாக கூடப்பட்டப்படும் இந்த அதியுயர் சபை 16.11.2015 அன்று வேர்சைல் கோட்டையில் (chteau de Versailles) அதிபரால் கூட்டப்பட்டது.
பிரான்சின் 577 பாராளுமன்ற உறுப்பினர்களும், 348 மேலவை உறுப்பினர்களும் முதல் தடவையாக ஒரே மண்டபத்தில் அமர்ந்து அதிபரின் உரையை கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்தனர்.
அதிபர் பிரான்சின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய உரை ஒன்றை 40 நிமிடங்கள் நிகழ்ந்தியிருந்தார்.
அதில், பிரான்சில் அரசியலைப்பு மாற்றப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்திற்கெதிராக யுத்தம் முனைவுப்படுத்தப்பட வேண்டும் என விளக்கியிருந்தார்.
வெளியுறவுக்கொள்கை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
அத்தோடு தற்போது நடைமுறையில் உள்ள அவசர கால சட்டத்தை மேலும் மூன்று மாதத்திற்கு பாராளுமன்றம் நீடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் காவற்துறைக்கும், நீதித்துறைக்கும் அதிக அதிகாரங்கள் கொடுக்கக்கூடியதாக அரசியலமைப்பு சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதோடு. தற்போதைய அரசியல் அமைப்பில் இருக்கும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
பிரான்சில் முதல் தடவையாக தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் முறைப்படி பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தது பிரான்சின் கடும்போக்குவாதிகளுக்கு அரசியல் செய்வதற்கான வெளியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
எனவே அவற்றை சமாளிக்க அகதிகள் சட்டத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்த அரசு முற்படலாம்.இது பிரான்சின் சமூகங்களின் மட்டத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கருத்துச் சுதந்திரத்தில் மேம்பட்டு திகழ்ந்த பிரான்ஸ் இனி அவற்றில் கடும் சட்டங்களை கொண்டு வரலாம். வெள்ளிக்கிழமைத் தாக்குதல்களில் சமூக வலைத்தளங்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது. எனவே அவை கண்காணிப்புக்கு உட்படுத்தப்படலாம்.
காவல்துறைக்கும் நீதித்துறைக்குமான அதீத அதிகாரங்கள் பிரஞ்சுக்குடிமக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை கூட்டி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக போர் தொடுக்குமாறு அமேரிக்க, ரஸ்ய அதிபர்களை கேட்டுக்கொள்ளப் போவதாவும் கூறினார்.
பயங்கரவாதற்திற்கெதிராக அரபு நாடுகள் இணைந்த புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற அவரது கோரிக்கை உலக ஒழுங்கை மாற்றியமைக்க அடிகோலும் என்பதில் ஐயமில்லை.
இந்த விடயத்தில் அரபு நாடுக்குள் பிளவுகள் ஏற்படுவதோடு இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகள் தீர்க்கமான வெளியுறவுக்கொள்கை ஒன்றை தீட்டிக்கொள்வதற்காக நெருக்குதலை ஏற்படுத்தும்.
இவை இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதல் எவ்வாறு உலக ஒழுங்கில் செல்வாக்கு செலுத்தியதோ அதற்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தப்போவது நிச்சியம்.
ஆக மொத்தத்தில்..
தீவிரவாதற்கும், உரிமைப் போராட்டத்திற்கும் துல்லியமான வரைவிலக்கணம் நிறுவப்படாத வரை எல்லாவற்றையும் வன்முறையாக பார்க்கும் மேற்குலகின் கண்ணோட்டம் இனி மாறுவதற்கான சந்தர்ப்பம் குறைந்து வருகிறது.
இந்த நிலைப்பாட்டை ஸ்ரீ லங்கா போன்ற நாடுகள் தமது அடுக்குமுறையை நியாயப்படுத்தவும், தமது மனித குலத்திற்கெதிராக செயற்பாடுகளை மூடிமறைக்கவும் பயன்படுத்திக்கொள்ளும்.
இவற்றை எல்லாம் மீறி தமிழராகிய நாம் எமது உரிமை போராட்டத்தை எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்போகிறோம் என்பதே இப்போதுள்ள பெருங்கேள்வியாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum