Top posting users this month
No user |
டெலிவரி பாயின் தொடர் தொல்லையால் ஊரையே காலி செய்த இளம்பெண்
Page 1 of 1

டெலிவரி பாயால் இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அந்த பெண், ஊரையே காலி செய்துவிட்டு சென்றுள்ளார்.
பெங்களூரில் உள்ள கோரமங்களா பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த இளம்பெண் ஒருவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோரமங்களாவில் உள்ள உணவகம் ஒன்றின் செல்போன் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
பின்னர் இரவு 10.30 மணிக்கு அந்த உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் உணவை டெலிவரி செய்துள்ளார்.
இதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார்.
மிகவும் எல்லை மீறி அந்த நபர் நடந்து கொண்டதால், அந்த பெண் உணவக உரிமையாளரிடம் அந்த நபர் மீது புகார் அளித்துள்ளார்.
உணவக உரிமையாளர் அந்த நபரை பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.
அதற்கு பிறகும் அந்த பெண்னை தொடர்பு கொண்டு பேசுவதை அந்த நபர் நிறுத்தவில்லை.
எனவே, அந்த பெண் கோரமங்களா பொலிசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
ஆனால் பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அந்த பெண் தன் தோழி வீட்டில் சில நாட்கள் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில், அந்த நபரின் தொல்லை தாங்க முடியாமல் தவித்த அந்த பெண் ஊரையே காலி செய்துவிட்டு சென்றுள்ளார்.
அந்த பெண், இந்த சம்பவத்தை அவர் சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனை பார்த்த பெங்களூர் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கேட்டறிந்துள்ளார்.
மேலும், அந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் பெண்ணிடம் உறுதியளித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum