Top posting users this month
No user |
Similar topics
பூசணிக்காய் லேகியம்
Page 1 of 1
பூசணிக்காய் லேகியம்
பூசணிக்காய்:
பூசணிக்காயில் மருத்துவக்குணங்கள் அதிகம் உள்ளதால் சித்தம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
தேவையான பொருள்கள்:
பூசணிக்காய் – 3.500 கிராம்
நெய் – 500 கிராம்
கற்கண்டு – 70 கிராம்
திப்பிலி – 70 கிராம்
சுக்கு – 70 கிராம்
சீரகம் – 70 கிராம்
இலவங்கப்பட்டை – 20 கிராம்
ஏலரிசி- 20 கிராம்
பச்சிலை – 20 கிராம்
மிளகு – 20 கிராம்
தனியா – 20 கிராம்
செய்முறை:
பூசணிக்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
பின் மிக்சியில் நன்கு அரைத்து நீரை வடிகட்டி கொள்ள வேண்டும். நீரையும், பூசணி சக்கையையும் தனித்தனியே பிரித்துக்கொள்ள வேண்டும்.
பின் பூசணி சக்கையை 500 கிராம் நெய்யில் மொறமொறப்பாகும்படி வறுத்து எடுக்க வேண்டும்.
நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக பிரித்துக்கொள்ள வேண்டும்.
பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபாதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். இதனுடன் பூசணிக்காய் தூளை சேர்த்து கிண்ட வேண்டும்.
நன்கு சேர்த்து கிண்டியபின் திப்பிலி, சுக்கு, சீரகம், இலவங்கப்பட்டை, ஏலரிசிஆகியவற்றுடன் பச்சிலை, தனியா, மிளகு ஆகியவற்றின் பொடியை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் நெய்யையும் இதனுடன் சேர்த்து எல்லா பொருள்களும் ஒன்றாக சேரும்படி மீண்டும் கிண்ட வேண்டும்.
இதனை தினமும் காலையில் 10 கிராம் அளவு எடுத்து இரண்டு அல்லது நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
மருத்துவக்குணங்கள்:
பூசணிக்காய் லேகியத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த பித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதயநோய் மற்றும் இருமல் ஆகியவை குணமாகும்.
மேலும் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, எலும்புருக்கி, அஸ்தி வெட்டை , பிரமேகம் ஆகியவற்றை குணமாக்கும் மற்றும் உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஆகும்.
குறிப்பு:
மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் இவற்றை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இவற்றை அதிகம் சாப்பிட்டால் பித்தத்தை அதிகப்படுத்தி நெஞ்செரிப்பு ஏற்படும். வயிற்றில் புளிப்பு ஏற்பட்டு வயிற்று வலி வயிற்றுபோக்கு ஏற்படும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum