Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சைனீஸ் ப்ரைடு ரைஸ்

Go down

சைனீஸ் ப்ரைடு ரைஸ்       Empty சைனீஸ் ப்ரைடு ரைஸ்

Post by oviya Wed Oct 28, 2015 12:35 pm

தேவையான பொருட்கள்
வெங்காயம் பொடியாக நற்க்கியது – 3 /4 கப்
எண்ணெய் – 2 1 /2 மேசைக்கரண்டி
முட்டை – 1 – 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)
சோயா சாஸ் – 1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக
நல்லெண்ணெய் -1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக
சிக்கன் எலும்பில்லாதது வேக வைத்தது – 1 கப் (விருப்பமெனில்)
கேரட் – 1 /2 கப்
பட்டாணி – 1 /2 கப்
வெங்காயத்தாழ்(green onion ) – 4
முளை கட்டிய பயறு(bean sprouts ) – 1 கப்
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
சாதம் – 4 கப் (வேக வைத்து ஆற வைத்தது )
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசியை பயன்படுத்திக் கொள்ளவும். அரிசியைக்
கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப் பதம் வற்றும் வரை வறுத்துக் கொள்ளவும்.
1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 4 – 6 மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும். சாதத்தை பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். பழைய சாதம் ப்ரைடு ரைஸ்
செய்வதற்கு நன்றாக இருக்கும்.
சாதம் நன்றாக ஆரினால்தான் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.
கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் 1 /2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயைச் சுற்றிலும் எண்ணெய் படருமாறு செய்யவும் , கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி கடாயைச் சுற்றிலும் படருமாறு செய்யவும். முட்டை மேலே எழும்பி வரும்போது அதை திருப்பிப் போட்டு வேக விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இல்லையெனில் கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி(முட்டை பொரியலுக்கு செய்வது போல) எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .
இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது, முளை கட்டிய பயறு(bean sprouts ) அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் நற்க்கி வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.
குறிப்பு
விருப்பத்திற்கேற்ப காய்கறிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிக்கனுக்குப் பதிலாக இறால் பயன்படுத்தலாம்.
பரிமாறும்பொழுது சில்லி சாஸ், சோயா சாஸ் வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum