Top posting users this month
No user |
வெள்ளை பூசணி அல்வா / காசி அல்வா
Page 1 of 1
வெள்ளை பூசணி அல்வா / காசி அல்வா
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணி(துருவியது ) – 2 கப்
சர்க்கரை – 1 1/2 கப் (விருப்பத்திற்கேற்ப )
நெய் – 1 கப்
பாதாம் பருப்பு – 5
முந்திரிப்பருப்பு – 10
பால் – 2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ (அ ) கேசரி கலர் – சிறிது
ஏலக்காய்தூள் – சிறிது
செய்முறை
வெள்ளை பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தோலை சீவி விட்டு, துருவிக்கொள்ளவும்.
துருவலை கையால் நன்கு பிழிந்து, அதில் உள்ள நீரை எடுத்து விடவும். இல்லாவிடில் பிழிந்து விட்டு ஒரு சுத்தமான துணியில் போட்டு நன்கு வடிய விடவும்.
குங்குமப்பூவை வெது வெதுப்பான பாலில் ஊற வைக்கவும். கேசரி பவுடர் எனில் சிறிது தண்ணீரில் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடு செய்யவும். நெய் சூடானதும் அதில் பிழிந்து வைத்துள்ள வெள்ளை பூசணி துருவலைச் சேர்த்து நிறம் மாறி, மிருதுவாகும் வரை வதக்கவும்.
அடிப்பிடிக்காமல் கவனமாக வதக்க வேண்டும்.
இப்போது சர்க்கரை சேர்த்து நன்கு கரையுமாறு கலக்கவும். சர்க்கரை கரைந்து திக்காக ஆரம்பிக்கும், மற்றும் நெய் பாத்திரத்தின் ஓரங்களில் வரும்போது பாலில் ஊற வைத்துள்ள குங்குமப்பூவை சேர்க்கவும்.
இதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அல்வா பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து விட்டு துருவிய பாதாம் தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum